பாலியல் குற்றங்கள் குறைய என்ன செய்யலாம்?

நாட்டில் பாலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், அதைக் குறைக்க, குழந்தைகளுக்கு சில நெறிமுறைகளைக் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவற்றில் சில…

***

சட்டங்களால் மட்டுமே குற்றங்களைக் குறைக்க முடியாது. சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அளிக்கலாம்.

பாலியல் தொடர்பான குற்றங்கள் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை சார்ந்தது.

எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

மாணவ-மாணவிகள் தங்கள் மீது பாலியல் ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும்.

பேருந்து, பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசிச் செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்றுத்தர முடியும்.

எனவே, பெண் குழந்தைகளிடம் இதுபற்றி விழிப்புணர்வினை வழங்க வேண்டும். அதே நேரம் ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் நல்ல மாண்புகளை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும்.

பெண்களை நல்ல தோழிகளாக, சகோதரிகளாக மதிக்கும் வகையில் பழக்க வழக்கத்தை உருவாக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும்.

எதிர் பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக் கொடுப்பது அவசியம்.

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்குமான சட்டமும்தான்.

எனவே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியும் புகார் தெரிவிக்கவேண்டும்.

பெற்றோர், ஆசிரியர்கள், சமூகமும் இதில் விழிப்புணர்வு பெறவேண்டும். நாட்டில் பாலியல் வன்முறைகள் நிகழாத நிலை ஏற்படவேண்டும்.

நன்றி: மாலைமலர்

Comments (0)
Add Comment