வரவுக்கு மேலே செலவு செய்தால்…!

நினைவில் நிற்கும் வரிகள்:

*** 

காசே தான் கடவுளப்பா அந்த
கடவுளுக்கும் இது தெரியுமப்பா 
கைக்குக் கைமாறும் பணமே – உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே – நீ
தேடும் போது வருவதுண்டோ – விட்டுப்
போகும் போது சொல்வதுண்டோ?

                               (காசே தான்…)

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்
வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
களவுக்குப் போகும் பொருளை எடுத்து
வறுமைக்குத் தந்தால் தருமமடா
பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா

                                  (காசே தான்…)

கொடுத்தவன் விழிப்பான்
எடுத்தவன் முடிப்பான்

அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே
சிரித்தவன் அழுவதும்
அழுதவன் சிரிப்பதும்

பணத்தால் வந்த நிலை தானே
கையிலும் பையிலும் ஓட்டமிருந்தால்
கூட்டமிருக்கும் பின்னோடு
தலைகளை ஆட்டும்
பொம்மைகளெல்லாம்

தாளங்கள் போடும் பின்னோடு

                                (காசே தான்…)

– 1968-ம் ஆண்டு வெளிவந்த ‘சக்கரம்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

Comments (0)
Add Comment