எண்ணங்களே வாழ்க்கையின் சிற்பி!

– வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய வரிகள்:

தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது.

மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அது.

தடுமாற்றம், சினம், கவலை, பேராசை நான்கும் வாழ்க்கைக்கு நன்மை தரும் வழிகளை அடைத்து விடுகின்றன.

ஆசையின் இயல்பறிந்து அதை நலமே விளைவிக்கத் தக்க வகையில் பயன்படுத்தி ஒழுங்குபடுத்தி விட்டால் அதுவே ஞானமாகவும் வளரும்.

மனிதன் என்பதற்கு அடையாளம் அவனிடமுள்ள அன்புதான்.

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும். எண்ணும் எண்ணங்கள் எங்கும் பாயும்.

எண்ணமே எக்காலத்திலும் வாழ்க்கையின் சிற்பி; எண்ணிட எண்ணிட இனிதே பயக்கும்.

கடமையை உணர்ந்திடு; காலத்தில் செய்திடு; உடம்புக்கும் நல்லது; உள்ளமும் அமைதியாகும்.

ஆக்கமும் அழிவும் அணுக்கள் கூடுதல் பிரிதலே. நீக்கமற நிறைந்தவனின் நினைக்கும் ரசிக்கும் நிலை அறிவு.

இயற்கையை அறிந்து அதனோடு இணைந்து எண்ணுபவர் எண்ணம் எப்போதும் எவ்விடத்தும் கவலையாய் மாறாது.

விருப்பத்தை ஒழிக்க வேண்டாம். வெறுப்பை அழித்தால் அதுவே மேன்மைக்கு வழிவகுக்கும்.

வாழ்வில் மனத்தூய்மை, ஒழுங்கான உணவு முறை, அளவான உழைப்பு, ஓய்வு இவற்றை முறையாகக் கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

உண்மை எது. பொய் எது என்று விசாரிக்காமல், இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

Comments (0)
Add Comment