சூடு பிடிக்கும் கொடநாடு வழக்கு!

கடந்த தேர்தல் சமயத்தில் பேசப்பட்ட கொடநாடு வழக்கு அண்மையில் மீண்டும் கிளறப்பட்டு விசாரணை நடக்கிறது. ஊடகங்களில் மறுபடியும் அது தொடர்பான செய்திகள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.

இப்போது வழக்கின் புதுத்திருப்பமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜின் சகோதரரான தனபால், உறவினர் ரமேஷ் என்று இருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வழக்கின் முக்கிய சாட்சிகளைக் கலைக்க அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையும் நடந்து, கொலையும் நடந்து மர்மமான உயிரிழப்புகளும் நடந்த பிறகும் அ.தி.மு.க ஆட்சி நீடித்த வரை இது தொடர்பான வழக்கு விசாரணை பெயரளவுக்கே நடந்தது. வழக்கை அவசரகதியில் முடிக்கவும் முயற்சி நடந்தது.

2017 ல் நடந்த கனகராஜின் மர்மமான விபத்து தொடர்பான சாட்சியங்களைக் கலைக்க முயற்சித்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை இத்தனை காலம் கழித்துக் கைது செய்திருக்கிறார்கள் என்றால்,

வழக்கின் காலதாமதம் யாருக்குச் சாதகமாக அமைய வாய்ப்பிருக்கிறது என்பதைச் சிறு குழந்தைகள் கூடச் சொல்லிவிடும்.

தாமதிக்கப்பட்ட நீதி எந்த விதத்திலும் மறுக்கப்பட்ட நீதியாகி விடக்கூடாது.

ஏற்கனவே காலதாமதத்தைச் சந்தித்திருக்கிற கொடநாடு வழக்கில் இனியாவது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

Comments (0)
Add Comment