எம்.ஜி.ஆரின் நாடக வாழ்க்கை!

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும் அதில் வெற்றிக்கொடி நாட்டுவது அவரது தனிச்சிறப்பு. சினிமா, அரசியல் என இரண்டிலும் உச்சம் தொட்டவர் அவர்.

சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக, தயாரிப்பாளராக, தொழில்நுட்பக் கலைஞராகவும் அவர் தனித்த அடையாளத்துடன் திகழ்ந்திருக்கிறார். சினிமாவில் நுழைவதற்கு முன்னால் அவர் நாடகங்களில் நடித்து அதிலும் தனி முத்திரைப் பதித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

ஆரம்பக் காலங்களில் அவர் நடித்த நாடங்களின் பட்டியல் இதோ:

நாடகங்களும், அதில் எம்.ஜி.ஆரின் கதாப்பாத்திரங்களும்
******
1.மகாபாரதம் – உத்ரன்.
2.இராமாயணம் – அகத்தியர்.
3.ரத்னாவளி – நடனப்பெண்.
4.தசாவதாரம் – பரதன்.
5.நல்லதங்காள் – 7வது குழந்தை.
6.ராஜேந்திரன் – லட்சுமி(பெண்ணாக)
7.மகாபாரதம் – விகர்ணன், சத்ருகன்.
8.கதர்பக்தி.
9.கதரின் வெற்றி.
10.பதிபக்தி.

11.தேசபக்தி.
12.தேசியக்கொடி.
13.கவர்னர்ஸ்கப்.
14.பம்பாய் மெயில்.
15.ராசம்மாள்.
16.சந்திரகாந்தா.
17.மோகனசுந்தரம்.
18.கோவலன்.
19.கற்பின் வெற்றி.
20.பவளக்கொடி.
21.வள்ளி திருமணம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் உருவான  ‘எம்.ஜி.ஆர் நாடக மன்றம்’ நடத்திய நாடகங்கள் :
****
1.அட்வகேட் அமரன்.
2.சுமைதாங்கி.
3.இடிந்த கோயில்.
4.கள்வனின் காதலி.
5.இன்பக்கனவு.

மக்கள் திலகம் நடித்த நாடகக் கம்பெனிகள்:

1.மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி.
2.கிருஷ்ணன் நினைவு நாடக சபை.
3.உறையூர் முகைதீன் நாடக கம்பெனி.

Comments (0)
Add Comment