காஷ்மீரை விட்டு வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

ஜம்மு – காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உயிரிழந்தனர்.

குறிப்பாக, வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீருக்குள் வர அஞ்ச வேண்டும் என்பதற்காக, ஜம்மு – காஷ்மீரில் தங்கியிருந்து பணியாற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் அச்சமடைந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பங்களுடன் திரும்பி வருகின்றனர்.

தாக்குதல் குறித்து கூறிய புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், “ஜம்மு – காஷ்மீரின் சூழல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

இங்கு குடும்பத்துடன் தங்கியிருந்து எங்களால் பணியாற்றவோ நிம்மதியாக வாழவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கே திரும்புகிறோம்” என்கிறார்.

Comments (0)
Add Comment