இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

                 (எல்லாரும்)

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

                (எல்லாரும்)

இருட்டில் மறைந்து கொள்ள
விளக்கணைப்பார் சிலர்
கிணற்றில் இருந்துக் கொண்டு உலகளப்பார்

நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்
அந்த நீசரை உலகில் யார் பொறுத்திருப்பார்

             (எல்லாரும்)

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம்
பசுங் கூழெனக் துடிப்போர்க்கு சோறிடுவோம்

தாயகம் காப்போரின் தாள் பணிவோம்
யாவும் தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்

              (எல்லாரும்)

வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

               (எல்லாரும்)

– 1964-ம் ஆண்டு வெளிவந்த ‘கருப்புப் பணம்‘ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

Comments (0)
Add Comment