யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம்!

ஆதரவாளர்களுக்கு திருமதி சசிகலா வேண்டுகோள்

அதிமுக துவங்கப்பட்டு 50 வது ஆண்டு (பொன்விழா) துவக்க விழாவையொட்டி, சென்னை ராமாவரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் வாய்ப்பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமதி சசிகலா பங்கேற்றார்.

அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்த சசிகலா, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

முன்னதாக அதிமுக பொன்விழா மலரை வெளியிட்ட சசிகலாவுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

அப்போது பேசிய சசிகலா, “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சியில் எப்போதுமே தானும் ஒரு தொண்டன் தான் என அடிக்கடி கூறுவார். அவர் வழி வந்த தொண்டர்கள் யாரும் பிறர் மனம் புண்படும்படி பேசமாட்டார்கள்” எனக் குறிப்பிட்டார். 

கட்சிக்கு எள் முனை அளவும் துரோகம் செய்ய தாம் நினைத்ததில்லை எனக் கூறிய சசிகலா, மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாமும் செய்யக்கூடாது என ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டார்.

டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவர் வழக்கறிஞர் முனைவர் திரு. குமார் ராஜேந்திரன் அவர்கள், இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பேசினார்.

Comments (0)
Add Comment