நீடித்த ஆயுளுடன் வாழச் செய்யும் தமிழ் மொழி!

மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே. இதனால், தமிழ் பேசினால் நூறாண்டுகள் வாழலாம் என்கின்றனர் சித்தர்கள்.

நம் உடம்பில், ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சு ஓடுகிறது. இந்த 21,600 மூச்சுகளைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர் மெய்) எழுத்துகள் உருவாக்கப்பட்டன.

1 நிமிடத்திற்கு சராசரியாக 15 முறை மூச்சு விடுகிறான் மனிதன். உட்கார்ந்திருக்கும்போது 12 மூச்சும், நடக்கும்போது 18 மூச்சும், ஓடும் போது 25 மூச்சும், தூங்கும்போது 32 மூச்சும், படபடப்பு, கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும்போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால், அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். நம் ஆயுளைக் குறைத்துக் கொள்வது நாமே!

இந்த மூச்சினுடைய அளவு அதிகரித்தால், அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது. அந்த வகையில், தமிழ் மொழி, நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்க்கைநெறி மொழி.

Comments (0)
Add Comment