குழந்தைகளுக்கு எதிராக 99 சதவீத குற்றங்கள்!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99 சதவீத குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ளன; அவை ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் பதிவாகி உள்ளன.

சிறுமியருக்கு எதிரான வன்முறைகளும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இந்தக் குற்றச் சம்பவங்களினால் கடந்த ஆண்டு 28,327 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ‘கிரை’ அமைப்பின் இயக்குனர் பிரீத்தி மஹாரா பேசும்போது, “சிறுவர் – சிறுமியர் என இருதரப்பினருக்கு எதிராகவும் வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எனினும், சிறுமியர் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களே அதிகமாக நடக்கின்றன.

உலகம் முழுதும் சிறுமியருக்கான உரிமைகள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. எனினும், அவர்களே இந்தச் சமூகத்தில் மிகவும் பாதிக்கபடக்கூடிய பிரிவினராக உள்ளனர்” எனக் கூறுகிறார்.

Comments (0)
Add Comment