– தொல்லியல் துறை முடிவு
தமிழக தொல்லியல் துறை சார்பில், இந்தாண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை 10 இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்தன.
அவற்றில் கிடைத்த தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் மற்றும் அகழாய்வு பற்றிய இடைக்கால அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் தற்போது நடக்கின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக ஏழு இடங்களில் அகழாய்வுப் பணிகளை நடத்தவும், பழைய இடங்களில் அகழாய்வுகளைத் தொடரவும் தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான, ‘கபா’விடம் அனுமதி கோர உள்ளது.
இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம், அடுத்த மாதம் நடக்க உள்ளது. தமிழகத்தின் வேண்டுகோளுக்கு அனுமதி கிடைத்தால், அடுத்தாண்டு பொங்கலுக்குப் பின், புதிய உத்வேகத்துடன், அகழாய்வுப் பணிகள் தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.