பாரதியும், அவரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கமும்!

வாசகர் கேள்வி : ”ஹரிஜனுக்குப் பூஜை அணிவித்து அவனைப் பிராமணராக்கிய பாரதியின் செயல் காலப் போக்கிற்குச் சிறிதும் சம்பந்தமற்ற, தேவையில்லாத, நடைமுறைக்கு
ஒவ்வாத செயல் என்கிறீர்களா?”
அரசு பதில் : ”பாரதியாரால் பூணூல் அணிவிக்கப்பட்ட சிறுவனின் பெயர் கனகலிங்கம். அவரை நான் அறிவேன். இப்போது அவர் இல்லை. ஆனால் பலமுறை நாங்கள் சந்தித்திருக்கிறோம். அளவளாவியிருக்கிறோம். ஒன்று மட்டும் உறுதி. கனகலிங்கத்திற்குப் பூணூல் போட்டதால் பாரதியார் பெருமை அடைந்தார். சந்தேகமில்லை. கனகலிங்கம் உயர்ந்தாரா என்பது தான் கேள்வி”
– 21.10.76 அன்று வெளிவந்த குமுதம் அரசு கேள்வி- பதில் பகுதியிலிருந்து…
Comments (0)
Add Comment