பேஸ்புக் முடக்கம்: எவ்வளவு இழப்பு?

இரண்டு நாட்களுக்கு முன் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் சுமார் ஆறுமணி நேரம் முடங்கின.

உலக அளவில் இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறவர்களாகக் கணக்கிடப்பட்டிருப்பவர்கள் மட்டும் 350 கோடிப் பேர்.

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க் தொழில்நுட்ப ரீதியாக நடந்த இந்தப் பொதுமுடக்கத்திற்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

இதனால் பேஸ்புக்கின் பங்குச்சந்தை நிலவரம் சட்டென்று கீழிறங்கியிருக்கிறது.

இதனால் இந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிற இழப்பு மட்டும் 53 ஆயிரம் கோடி என்று ஒரு கணக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

6 மணி நேரத்திற்கு இந்த இழப்பு என்றால் வருமானம் எந்த அளவுக்கு இருந்திருக்கும்?

Comments (0)
Add Comment