‘வாட்ஸ் ஆப்’ செயலியில் ரூபாய் சின்னம் சேர்ப்பு!

ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் தங்களது தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பக் கூடிய வகையிலான வாட்ஸ் ஆப் செயலியை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

‘பேஸ்புக்’ நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, 2018ம் ஆண்டு யு.பி.ஐ., வாயிலாக பணம் அனுப்பும் வசதியை நம் நாட்டில் அறிமுகம் செய்தது.

இதற்கான பரிசோதனை குறிப்பிட்ட சில லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்தது.

வாட்ஸ் ஆப் நிறுவனம் பணப் பரிமாற்றம் அளிக்கும் சேவையை வழங்க, என்.பி.சி.ஐ., எனப்படும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அனுமதி வழங்கியது.

இதையடுத்து பணம் வழங்கும் சேவையை டிசம்பரில் இந்தியாவில் வாட்ஸ் ஆப் முழுமையாக அமல்படுத்தியது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப் வாயிலாக இந்தியப் பயனாளர்கள் பணம் அனுப்புவதை எளிதாக்க, அந்த செயலியில் வார்த்தைகள் மற்றம் எண்களை நாம் தட்டச்சு செய்யும், ‘சாட் கம்போசரில்’ ரூபாய் சின்னம் சேர்க்கப்பட்டுள்ளது. ரூபாய் சின்னத்தைப் பயன்படுத்தி பயனாளர்கள் பணப் பரிமாற்றம் செய்யலாம்.

இதேபோல் கம்போசரில் உள்ள கேமரா வாயிலாக, ‘கியூ ஆர் கோட்’ஐ ஸ்கேன் செய்து, இரண்டு கோடிக்கும் அதிகமான வர்த்தக நிறுவனங்களுடன் பயனாளர்கள் பணப் பரிமாற்றம் செய்யலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment