வாலியின் நெகிழ்ச்சியான அனுபவம்:
எம்.ஜி.ஆர் ஓரு முறை என்னிடம்,
“வாலி! ‘ஏமாற்றாதே! ஏமாறாதே’ என்று பல்லவி வைத்து ‘அடிமைப் பெண்’ படத்திற்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுங்க” என்று கேட்டார்.
நானும் அவ்வாறே எழுதிக் கொடுத்தேன்.
மிகச் சிறந்த இசை மேதையான திரு.கே.வி.மகாதேவன் அவர்கள் அந்தப் பாடலுக்கு இசையமைத்தார்.
அப்படி இசையமைக்கும்போது “ஏமாற்றாதே.. ஏமாற்றாதே! ஏமாறாதே! ஏமாறாதே!” என்று மாற்றி இசையமைத்தார்.
இந்த மாற்றம் அண்ணன் எம்.ஜி.ஆருக்குப் பிடித்திருந்தது. ஆயினும் அந்த மாற்றத்தை உடனே அவர் ஆமோதிக்கவில்லை.
எனக்கு டெலிபோன் செய்து “இப்படி மாற்றப்பட்டிருப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே” என்று கேட்டுவிட்டுத் தான் எம்.ஜி.ஆர் அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்தார்”
– வாலி எழுதிய ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.