ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் கடந்தாண்டு பிரதமராக பதவியேற்ற யோஷிகிதே சுகா, பதவி விலகுவதாக அறிவித்தார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பொறுப்பேற்பர்.
அதன்படி, பிரதமர் சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், ஆளுங்கட்சியான லிபரல் ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
அதில் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 64 வயதான புமியோ கிஷிடா, ஜப்பானின் அடுத்த பிரதமராக வரும் அக்டோபர் 4-ம் தேதி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.