வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

வெற்றி பெற விரும்புவோர் நினைவில் கொள்ளவேண்டிய சூத்திரங்கள் பற்றி எடுத்துரைக்கிறார் தன்னம்பிக்கைப் பேச்சாளர் சுமித் சௌத்ரி.

****

* உலகில் நீங்கள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

* எதையும் ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள், ‘இது நடக்குமா?’ என்று யோசிக்காமல் ‘சாத்தியவாதி’யாக இருங்கள்.

* உங்கள் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுங்கள், யார் முன்னால் நாம் எப்படித் தோன்றுகிறோம் என்பதில் கவனம் செலுத்துங்கள்!

* எதையும் தெளிவாகச் சொல்லப் பழகுங்கள்,
உங்கள் கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி பேசும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்.

* தனியே இயங்குவதைவிட, ஒரு குழுவோடு, நண்பர்களோடு, நலம் விரும்பிகளோடு முன்னேறுவது சுலபம். உங்களுக்கான குழுவை, நெட்வொர்க்கைத் தேடிப் பிடியுங்கள்!

* எதைச் செய்தாலும், சுற்றியிருப்பவர்களிடம், அதுபற்றி கருத்துச் சொல்லத் தகுதி உள்ளவர்களிடம் ‘இது எப்படி வந்திருக்கிறது? என்று கேளுங்கள், தேவையான திருத்தங்களைச் செய்துகொள்ளுங்கள்.

* உங்களுடைய பலங்கள் – பலவீனங்களைப் புரிந்துகொள்ளுங்கள்!

*சுய கட்டுப்பாடும் ஒழுக்கமும் அவசியம்.

* எப்போதும் பின்னே நடந்து பழகாதீர்கள், முன்னே நடந்து வழிகாட்டும் தலைமைக் குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!

* உங்களுடைய இலக்குகளைத் திட்டமிடுங்கள், அவற்றை எட்டியதும், அடுத்த இலக்குகளைச் சிந்திக்கத் தொடங்குங்கள்.

*எதையாவது புதிதாகக் கற்றுக்கொண்டே இருங்கள்!

– நன்றி என்.சொக்கன்

Comments (0)
Add Comment