”பஞ்சுப் பொதியை வைத்தது போன்று நரைத்த தலைமுடி, பெரிய மீசை, புலமைப்பித்தனின் தோற்ற கம்பீரத்தைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. அவர் முடி நரைத்திருக்கலாம். ஆனால் தமிழ் மீதான ஆழ்ந்த காதல் இறுதி வரை நரைக்கவே இல்லை.
ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி எம்.ஜி.ஆரின் அன்பால் கட்டுண்டு அ.தி.மு.க.வில் பணியாற்றினார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் ‘குடியிருந்த கோவிலில்’, “நான் யார் நான் யார்?” என்ற பாடலின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானவர். புகழ் வாய்ந்த பாடல்களை எம்.ஜி.ஆருக்காகவும், தமிழ் கூறு நல்லுலகத்திற்காகவும் தந்தவர்.
“நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற”
“தெருத்தெருவாய்க் கூட்டுவது பொது நலத்தொண்டு.. ஊரார் தெரிந்து கொள்ளப் படம் பிடித்தால் சுய நலமுண்டு”
“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே”
“ஓடி ஓடி உழைக்கணும்.. ஊருக்கெல்லாம் கொடுக்கணும்”
“சிரித்து வாழ வேண்டும்.. பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே”
– என்று எம்.ஜி.ஆரின் பொன்மனத்தை மக்களிடம் சேர்த்த வரிகளுக்குச் சொந்தக்காரர்”
– நன்றி : ஆனந்த விகடன்- 22.9.21 தேதியிட்ட வார இதழில் வைகைச் செல்வன் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.
#புலமைப்பித்தன் #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் #அதிமுக #pulamaipithan #MGR #ADMK #puratchithalivar #mgr