மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படாத நிலையில், கடும் குளிர், வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டி உள்ளது. இன்றைய தினம் டில்லியில் அதிவேக விரைவுச் சாலையை 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு சில விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், வேளாண் சட்டத்தைத் திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ள விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. #FarmersProtest100Days என்ற ஹேஷ்டாக்கில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
05.03.2021 03 : 55 P.M.