ஆண்டான் இல்லை, அடிமை இல்லை!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

எண்ணத்தில் நலம் இருந்தால்
இன்பமே எல்லோர்க்கும் !

அன்புள்ள தோழர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் !

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜமானாம்
                                       (ஒன்றே…) 

ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும் போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை

யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !

உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!
                                       (ஒன்றே…) 

-1974 ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘சிரித்து வாழ வேண்டும்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன்.

05.03.2021 11 : 50 A.M.

Comments (0)
Add Comment