வாழைக்காயைக் கொண்டு பொறியல், கூட்டு செய்து சாப்பிடுவோம். சற்று வித்தியாசமாக வாழைக்காயில் கூடுதல் சுவை தரக்கூடிய வாழைக்காய் கட்லெட் செய்வது எப்படி என்பது குறித்து பாா்க்கலாம்.
தேவையானவை:
வாழைக்காய் – 2
துருவிய பீட்ரூட், கேரட் – 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு
மல்லித்தழை, புதினா – சிறிதளவு
பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் – சிறிதளவு
மிளகாய்த்தூள், மசாலாத்தூள் – தேவையான அளவு
கார்ன்ஃப்ளார் – ஒரு டீஸ்பூன்
பிரெட் தூள் – ஒரு கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயைத் தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் வேக வைத்து, தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, மல்லித்தழையைப் போட்டு, வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளவும்.
சற்று வதங்கியதும் கேரட், பீட்ரூட் துருவலைச் சேர்த்து வதக்கவும். மசித்து வைத்துள்ள வாழைக்காயுடன் சேர்க்கவும். பிறகு, உப்பு, மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கெட்டியான பதத்திற்கு வந்ததும், ஒரு டீஸ்பூன் கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக கரைத்து ஊற்றவும்.
கடைசியாக பிரெட் தூளை சேர்த்து கிளறி இறக்கவும்.
இதை கட்லெட் வடிவத்தில் செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.
எண்ணெய் ஒத்துக் கொள்ளாதவர்கள் தோசைக்கல்லில் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு ரோஸ்ட் ஆனதும், வாய்க்கு ருசியான வாழைக்காய் கட்லெட்டை எடுத்து ஒரு கட்டு கட்டலாம்.
02.03.2021 04 : 56 P.M