தமிழகம் தான் இந்தியாவின் வழிகாட்டி!

தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது மறைந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். வசந்தகுமாருக்காக கட்டப்பட உள்ள மணி மண்டபத்திற்கும் அடிக்கல் நாட்டியதோடு, வசந்தகுமாரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

பின்னர், கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாச்சாரத்தை காக்க வேண்டியது என் கடமை. தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம். காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்தியக் குடிமகன்.

அந்த நேரத்தில் இந்தியப் பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவுகொடுத்தால், பொருளாதாரச் சீரழிவை ஏற்படும் என்றனர். ஆனால் காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதைக் கேட்காமல், மக்களுக்கு உறுதியளித்தபடி மதிய உணவு வழங்கினார்.

காமராஜர் முயற்சியால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பெருமை காமராஜரை சாரும். அதுதான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி எனக் கூறினேன்” எனப் புகழாரம் சூட்டினார் ராகுல்காந்தி.

01.03.2021 01 : 20 P.M

Comments (0)
Add Comment