9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்!

தமிழக சட்டசபையின் இந்தாண்டின் முதல் கூட்டம், பிப் 2-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 23-ம் தேதி துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, 110-வது விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், “பொதுத்தேர்வு இன்றி 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும்.

2021 மே 31-ம் தேதிக்குள் ஓய்வு பெறும் அனைவருக்கும் புதிய ஓய்வு வயது வரம்பு பொருந்தும்.

தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக இருக்கும் நிலையில் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

25.02.2021  12 : 45 P.M

Comments (0)
Add Comment