கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, முட்டில் பகுதியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார்.
அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், “இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை உலகமே பார்க்கிறது. ஆனால் விவசாயிகளின் வலியை மத்திய அரசால் புரிந்துகொள்ள முடியவில்லை.
விவசாயிகளின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் பிரபலங்கள் நம்மிடம் உள்ளனர். ஆனால் இந்திய அரசு விவசாயிகளின் மீது அக்கறை காட்டவில்லை.
தொடர் போராட்டங்கள் நடத்தாவிட்டால், இந்த 3 புதிய வேளாண் சட்டங்களை அவர்கள் திரும்பப் பெறப்போவதில்லை. இந்தச் சட்டங்கள் இந்தியாவில் விவசாய முறையை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரத மாதாவுக்கு சொந்தமான ஒரே தொழில் விவசாயம். மற்ற ஒவ்வொரு வணிகமும் மற்றவர்களுக்குச் சொந்தமானது. ஒரு சிலர் விவசாயத்தைச் சொந்தமாக்க விரும்புகிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.
22.02.2021 04 : 45 P.M