கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்!

மட்டன் சுக்காவருவலைப் போன்ற சுவை மிகுந்த கேரள ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்டை எப்படி செய்வது என்பதன் செய்முறை கீழே….

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1 கிலோ
மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது

பொட்டுக்கடலை பவுடர் – 1 ஸ்பூன்
சோம்பு – 2 ஸ்பூன்
வர மிளகாய் – 8
மிளகாய் தூள் – 4 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு – 8 தேவையான அளவு

செய்முறை :

மட்டனை நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்த மட்டனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு சோம்பு, வரமிளகாய், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதினை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பின்னர் இவற்றை குக்கரில் போட்டு 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னா் சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்த நிலையில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னா் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்ட வேண்டும்.

பின் அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கி இளம்சூட்டில் பாிமாறலாம்.

20.02.2021 04 : 46 P.M

Comments (0)
Add Comment