இந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், வரும் 23ம் தேதி மீண்டும் கூடுகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த முறை தமிழக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அந்த வகையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல் ஓ.பி.எஸ். தாக்கல் செய்கிறார்.
தேர்தல் காலம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மக்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்ப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. புதிய செலவுகள், வரவுகள் தொடர்பான முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதல்வர் தலைமையில் அண்மையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இடைக்கால பட்ஜெட் 23ம் தேதி தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.
16.02.2021 02 : 12 P.M