பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு!

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வை நடத்தியது. மூன்று கட்ட அகழாய்வுகள் மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அகழாய்வுப் பணியை மத்திய அரசு கைவிட்ட நிலையில் நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த ஆண்டு நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் பிப்.19 தொடங்கி செப்.30 வரை நடந்தன. இதில் 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

சமீபத்தில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 7-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே சட்டப் பேரவையில் அறிவித்தபடி, தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்காக 1100 எண் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்த உதவி எண் (1100) மூலம், தெரிவிக்கப்படும் குறைகளுக்கு உடனடியாக துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழக விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் விதமாக ரூ.12,110 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். 16.34 லட்சம் விவசாயிகளுக்கு தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட உள்ளது.

13.02.2021   01 : 30 P.M
Comments (0)
Add Comment