* கவிஞர் கண்ணதாசன் தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த சரித்திரப் படம் ‘பவானி’. சில நாட்கள் படப்பிடிப்போடு நின்றுபோனது.
* ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்கு பிறகு ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படம் தொடங்கப்பட இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இதற்காக எம்.ஜி.ஆர் ஆப்பிரிக்காவுக்குக் கூட சென்று வந்தார். ஆனால் ஏனோ படம் ட்ராப் ஆனது.
* தன் சொந்தத் தயாரிப்பில் ‘கங்கை முதல் கிரெம்ளின் வரை’ என்ற படத்தை சோவியத் ரஷ்யாவுடன் இணைந்து எம்.ஜி.ஆர். தயாரிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்காகத் தான் 1974ஆம் ஆண்டு ரஷ்யாவுக்கு சென்று வந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் ஆரம்பக்கட்ட பணிகளோடு இந்தப்படம் நின்றுபோனது.
* ‘மலைநாட்டு இளவரசன்’ என்ற டார்ஜன் படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்தது. ஆனால் இந்தப்படமும் அறிவிப்போடு நின்று போனது.
* தேவர் ஃபிலிம்சுக்காக ‘தந்தையும் மகனும்’ என்ற டபுள் ஆக்ஷன் படத்துக்கு பூஜை போடப்பட்டது. தந்தையாகவும், மகனாகவும் எம்.ஜி.ஆர். டபுள் ஆக்ட் செய்யவிருந்தார். ஜோடியாக பத்மினியும், சந்திரகலாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஏனோ படம் வளரவில்லை.
* நடிகை யூ.ஆர்.ஜீவரத்தினம் தயாரிப்பில் நடிக்கவிருந்த படம் ‘சிரிக்கும் சிலை’. இதுவும் நின்றுபோனது.
* கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையை படமாக எடுக்க பெரும் முயற்சி மேற்கொண்டார் எம்.ஜி.ஆர். அதில் நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியனை நடிக்க வைக்கவும் அவர் முடிவு செய்திருந்தார். இறுதியில் படம் கைகூடவில்லை.
*’வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு போட்டியாக கவிஞர் கண்ணதாசன் தயாரிக்கவிருந்த படம் ‘ஊமையன் கோட்டை’. இயக்குநர் யார் என்று குறிப்பிடப்படாமலேயே விளம்பரம் கூட வெளியானது. ஆனால் படப்பிடிப்பு தொடங்காத நிலையிலேயே படம் கைவிடப்பட்டது.
12.02.2021 11 : 50 A.M