குழந்தைகளை மகிழ்விக்கும் மனப் பயிற்சி!

சிரிப்பு ஒரு தொற்று. அது சீட்டுக்கட்டின் ஜோக்கர் போல எந்தச் சூழலையும் சமன் செய்து சரி செய்து விடும்.

குழந்தைகள் படிக்கும் போது தூங்கி வழிந்தாலோ, சோர்வாக கொஞ்சம் மந்தமாகத் தெரிந்தாலோ, ஏன் இப்படி தூங்கி வழிகிறாய், இதுவே டி.வி. பார்க்கச் சொன்னால் கண்கள் இரண்டையும் விரித்துக் கொண்டு பார்ப்பாய் என்று ஏதேதோ சொல்லாமல், அவர்களை இணக்கமாக அணுகி, கையைக் காலை ஸ்ட்ரெச் பண்ணி சின்ன பயிற்சி செய்ய சொல்லிப் பாருங்கள்.

கையை ஒரு கப் மாதிரி வைத்துக் கொண்டு முட்டிகளில், கால் தசைகளில் ஒரு விளையாட்டைப் போல் ஒரு மஸாஜ் செய்வது போல் தட்டிப் பாருங்கள். எதாவது ஒரு நகைச்சுவையான விஷயத்தை சொல்லி நீங்கள் சிரித்து அவர்களையும் சிரிக்க வையுங்கள்.

நீங்கள் அவர்களைக் கண்டிக்காமல், சத்தம் போடாமல், பயமுறுத்தாமல், அவர்களுக்குள் என்டோர்ஃபின்ஸ் சுரந்து அவர்கள் ஆட்டோமெட்டிக்காக உற்சாகமாகி சந்தோஷமாக படிக்க ஆரம்பித்து விடுவார்கள். அங்கே மகிழ்ச்சி பரவும்.

12.02.2021 11 : 50 A.M

Comments (0)
Add Comment