தமிழகத் தேர்தல் அறிவிப்பு எப்போது?

தமிழகத் தேர்தலுக்கான அனைத்து ஆயத்த வேலைகளும் நிறைவடைகிற நிலையில் இருக்கின்றன.

வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

சட்டமன்றத் தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு வசதியாக மாநிலத்தில் உள்ள விடுமுறை தினங்கள் பற்றிய தகவல்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

இதையடுத்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னைக்கு வந்து இரண்டு நாட்கள் முகாமிட்டிருக்கிறார். பல அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன.

பிப்ரவரி மாத  இறுதிக்குள்ளோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ தேர்தல் தேதி திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுவிடலாம் என்று தெரிகிறது.

தற்போது தான் நீண்ட கொரோனா இடைவெளிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிற நிலையில், மாணவ, மாணவியர்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருக்கிறது.

மே மாத துவக்கத்திற்குள் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட வாய்ப்பிருக்கிறது.

எது, எப்படியோ வெக்கை ஆரம்பித்துவிட்ட மாதிரி, தேர்தல் களத்திலும் சூடு பறக்க ஆரம்பித்துவிட்டது.

10.02.2021   01 : 45 P.M

Comments (0)
Add Comment