வசந்தகுமாரி

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார்.

1910- ஆம் ஆண்டு பிறந்த “அந்தப் பெண்ணுக்கு கோயம்புத்தூர் தாயி, பரதம் பட்டாபிராமய்யா, பிடில் சுப்பாராவ் மற்றும் வீணை தனம்மாள் ஆகியோரிடம் இசைப் பயிற்சியளிக்கப்பட்டது.

இதே ஜார்ஜ் டவுன் பகுதியில் வசித்து வந்த பிரபல இசைக் கலைஞர் திருவாரூர் ராஜாயி. இவருக்கு இசைப் பயிற்சியளிக்க பிரபல இசைக் கலைஞர் கூத்தனூர் ஐயாசாமி ஐயர் என்பவர் நியமிக்கப்பட்டார்.

ராஜாயின் வீட்டுக்கு, நாராயணம்மா தத்து எடுத்து வளர்த்து வரும் “அந்தப் பெண்ணும் இசைப்பயில வந்து போவதுண்டு. கூத்தனூர் ஐயாசாமி அவர்களின் சங்கீதம் ‘அந்தப் பெண்ணின் மனதை வருடி 1920-களில் இருவரும் ஒருமனத்துடன் திருமணமே செய்து கொண்டனர்.

“அந்தப் பெண்யார்? அவர்தான் மதறாஸ் லலிதாங்கி. ஐயாசாமி ஐயர் – மதறாஸ் லலிதாங்கி தம்பதியருக்கு 03.07.1928 அன்று பிறந்தாள் வசந்தகுமாரி வி.லி.க்ஷி. மதறாஸ் லலிதாங்கி வசந்தகுமாரி!

வி.லி.க்ஷி. எனும் மூன்றெழுத்து மந்திரம் எத்தனையெத்தனை ரசிகர்களை இன்னிசை மூலம் கட்டிப்போட்டுள்ளது! குழந்தை வசந்தியின் தொட்டில் வைபவத்திற்குப் பாடியவர் யார் தெரியுமா சாட்சாத் மகாராஜபுரம் விசுவநாத ஐயர் அவர்களேதான்.

மியூசிக் அகாதெமி நிறுவனரும், பிரபல மருத்துவருமான டாக்டர்.ப.ராமாராவ் அவர்கள், அப்போது தம்புசெட்டித் தெருவில் வசித்து வந்தார். சங்கீத பிதாமகர் புரந்தரதாசரின் வம்சாவளியான ‘தாசகூடத்தைச் சேர்ந்த நரசிம்மதாசர் என்பவர் ராமாராவ் அவர்களின் இல்லத்தில் தங்கி புரந்தரதாசரின் தேவர் நாமாக்களை இசைத்து வந்தார்.

ராமாராவ் அவர்களின் அழைப்பின் பேரில் கூத்தனூர் ஐயாசாமி ஐயரும், மதறாஸ் லலிதாங்கியும் குழந்தை வசந்தியுடன் இந்த இனிய கானத்தில் தம்மை மறந்து மூழ்கியே போனார்கள்.

சுமார் 1 வருட காலம் உருண்டோடியிட்டது. நரசிம்மதாசர் இப்போது லலிதாங்கிக்கு 20 தேவிநாமாக்களை போதித்து மெருகேற்றினார். அச்சமயம் இரண்டாவது உலகப்போர் மூண்டது. எப்படியாவது புரந்தரதாசரின் கிருதிகளை சுவரப்படுத்தி புத்தகமாக வெளியிட எத்தனித்தார் லலிதாங்கி.

இசைப் போஷகரும் ஆங்கில ஆசியருமான ஆர்.ரங்கராமானுஜ ஐயங்கார் அவர்களின் பெருமுயற்சியினால் ஹிந்துபத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் இலவசமாக காகிதங்களையளித்து உதவினார்.

1941 ஆம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி புரந்தரமணிமாலை புத்தகம் வெளிவந்தது. லலிதாங்கியின் கனவும் நிறைவேறியது கானகலாபூஷணி லலிதாங்கி 1950-ல் இறைவனடி சேர்ந்தார்!

இந்த லலிதாங்கியின் குமாரிதான் வி.லி.வசந்தகுமாரி எனும் இசையுலகின் வசந்த ராகம். முடிசூடா ராணியாகத் திகழ்ந்த எம்.எல்.வி. பட்டிதொட்டிகளெங்கும் புரந்தரதாசர் தேவர் நாமாக்களை பிரபலமடையச் செய்தார்.

கர்நாடக இசை உலகில் மட்டுமல்லாது திரைவானிலும் பின்னணிப் பாடகியாக மலர்ந்து ஒரு துருவ நட்சத்திரமாகவே ஒளிர்ந்தார், இந்த நிழிஙியின் மாணவி!

திரையுலகில் வி.லி.க்ஷி.யின் சாதனைகளைப் பார்ப்போமா?

எம்.கே. தியாகராஜ பாகவதரின் சொந்தத் தயாரிப்பான ‘ராஜமுக்தி’ (1948) படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வி.லி.க்ஷி. “குலக்கொடி தழைக்க (ராமப்ரியா), “ஆராரோ” (யமன்கல்யாண்) எம்.கே.டி யுடன் இணைந்து “என்ன ஆனந்தம்” (சிம்மேந்திரமத்திமம்) மற்றும் “இங்கும் அங்கும்” (மத்ய மாவதி) ஆகிய பாடல்களை சி.ஆர்.சுப்பராமன் இசையில் பாடிப் பிரவேசம் செய்தார்.

இசையமைப்பு மேற்பார்வை ஆலத்தூர் சிவசுப்பிரமணிய ஐயர். பி.யு.சின்னப்பா-டி.ஆர்.ராஜகுமாரி நடித்த “கிருஷ்ண பக்தி” (1948) படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் – குன்னக்குடி வெங்கடராமய்யர் இணைந்த இசையில் “ராதா சமேதா கிருஷ்ணா” பாடலைப் பின்னணியில் பாடியிருந்தார்.

சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஸரஸ்வதிமனோகரி ராகக்கிருதியான “எந்தவேடு கொ” வை திரையில் தோன்றி பாடி நடித்தார்.

1949-ல் “நல்ல தம்பி” படப்பாடலான “கானலோலன் மதனகோபாலன்” மற்றும் வைஜயந்திமாலா அறிமுகமான கிக்ஷிவின் “வாழ்க்கை” படத்திலிருந்து “நந்த கோபாலனோடு நான் ஆடுவேனே” ஆகியவை வி.லி.க்ஷி.க்கு நல்ல பெயரைத் தேடித்தந்தன.

எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு சி.ஆர்.சுப்பராமன் இணைந்து இசையமைத்த “கன்னியின் காதலி” (1949) படத்தில் “காண்பன யாவும் காவியம் போலே” மற்றும் திருச்சி லோகநாதனுடன் இணைந்து “புவி ராஜா” ஆகிய பாடல்களைப் பாடியிருந்தார்.

அதே ஆண்டு பிரபல இந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சாந்தாராம் “அப்னா தேஷ்” என்ற படத்தை இயக்கியிருந்தார்.

அது தமிழில் “நம் நாடு” எனும் பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. ஜி.கோவிந்தராஜூலு நாயுடு, எஸ்.புருஷோத்தமன் இசைப் பணியைச்செய்திருந்தனர்.

இதில் வி.லி.க்ஷி.க்கு 5 பாடல்கள்: “மோசம் போகாதே நீ”, “என்தன் மன உல்லாசம்”, “எனது எண்ணம் வீணே,” “வேதனை இல்லாலோகம்” மற்றும் “மனமே என்ன பேதமை” ஆகியவை.

1950-வது ஆண்டு எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.இராமசந்திரன் மாதுரிதேவி ஜி.சகுந்தலா எஸ்.ஏ. நடராஜன் ஆகியோரது நடிப்பில் “மந்திரிகுமாரி” திரைப்படம் வெளிவந்தது. கலைஞர் மு.கருணாநிதியின் கதை வசனத்தோடு ஜி.ராமநாதன் இசையில் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சாகாவரம்பெற்ற “வாராய் நீவாராய்” பாடல் இடம் பெற்றது இப்படத்தில்தான்.

இப்படத்தில் வி.லி.க்ஷி.க்கு 5 பாடல்கள். காம்போதி ராகத்தில் “இசைக் கலையே”, “ஆஹா.. ஹ.. வாழ்விலே” “எண்ணும் பொழுதினில் இன்பம்,” “காதல் பலியாகி நீயும்” மற்றும் ஜிக்கியுடன் இணைந்து “மனம் போல வாழ்வுபெறுவோமே” ஆகிய அனைத்தும் அமோக வரவேற்பு பெற்றன.

இதே 1950-ல் வி.லி.க்ஷி.க்கு மேலும் புகழ் சேர்த்த பாடல்கள் சில கரஹரப்ரியா, அடாணா, நாட்டைக்குறிஞ்சியில் ராகமாலிகையாக எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைப்பில் “ஏழை படும் பாடு” படத்தில் இடம்பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் “கண்ணன் மன நிலையே தங்கமே தங்கம்”, “யௌவனமே இன்ப கீதம், இதன் தெலுங்குப் பதிப்பான “பீதல பாடலு” வில் “யௌவனமே.. ஆஹா யௌவனமே.” மற்றும் “சரசுக்கு ரா” “பாரிஜாதம்” படத்திற்காக எஸ்.வி.வெங்கட்ராமன் மற்றும் சி.ஸி.சுப்பராமன் இசையில் “பிராண நாதனே” (சுத்தசாவேரி), “நியாயம் அல்லடிபாமா” (சிந்துபைரவி) மற்றும் “துளசி ஸ்ரீ ஜகன்மாதா (தேஷ்) 1951 ஆம் ஆண்டில் வி.லி.க்ஷி.க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

“மணமகள்” படப் பாடல்கள் சிம்மேந்திர மத்திமத்தில் தொடங்கி ராகமாலிகை ஸ்வரங்கள் காம்போதி, மோகனம், ஹிந்தோளம், தர்பார் மற்றும அடாணா என விரிய றி.லீலாவின் துணைக் குரலோடு “எல்லாம் இன்ப மயம்” என்ற பாடல்; மீண்டும் றி.லீலாவுடன் இணைந்து “ஆயிரத்தி தொள்ளாயிரத்தி”, க்ஷி.ழிசுந்தரம் அவர்களுடன் இணைந்து பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளிளே கண்ணம்மா..”, “பாவியினும் படு பாவி,” “திறந்த கூட்டை” மற்றும் சி.ஸி.சுப்பராமனுடன் இணைந்து “இரு காதலர் மகிழ்ந்தே” எனும் டூயட்என்ற இசை வெள்ளத்தை பாயவிட்டார் வி.லி.க்ஷி.

“நீலீவீநீஷீ நீலீவீநீஷீ” எனும் லத்தீன் அமெரிக்க மொழிப்பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடலையொற்றி “சமாதி” எனும் இந்திப் படத்தில் லதா மங்கேஷ்கரும், அமீர்பாய் கர்நாடகியும், சி.ராமச்சந்திரா இசையில் “கோரே கோரே” எனும் பாடலை பாடியிருந்தனர்.

அந்தப் பாடலின் சாயலில் ஸி.சுதர்சனம் இசையில், நடிகை லட்சுமிகாந்தத்தின் நடனப் பாடலுக்காக கிக்ஷிவின் “ஓர் இரவு” படத்தில் வி.லி.க்ஷி. “ஐயாசாமி ஆவோஜிசாமி” எனும் பாடலைப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றார்.

இதே ஆண்டு, வி.ஷி.ஞானமணியின் இசையில் “ராஜாம்பாள்” படத்திற்காக “ஆஹா ஹா மனைவியாவேன்” மற்றும் தேஷ் ராகத்தில் “சௌதாமினி” படத்திற்காக பாரதியாரின்” சுட்டும் விழிச் சுடர்தான்” போன்ற பாடல்கள்.

சித்தூர் வி.நாகைய்யா அந்தப்பள்ளி ராமா ராவ் இசையில் 1952-ல் வெளிவந்த படம் “தாய் உள்ளம்” அந்தப் படத்தில் இடம் பெற்ற “கொஞ்சும் புறாவே” “வெள்ளை தாமரை பூவில்”, “கோவில் முழுதும் கண்டேன்” மற்றும் “கதையைக் கேளடா” போன்ற பாடல்கள் தலை முறைகள் பலதாண்டி இன்றும் நம் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றன!.

அதே ஆண்டு “புரட்சி வீரன்” படத்தில் “காரணம் தெரியமல்” என்ற சங்கர ஜெய் கிஷன் இசையமைத்த பாடல்; விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் “பணம்” திரைப்படத்திற்காக “குடும்பத்தின் விளக்கு” மற்றும் ஜி.கே.வெங்கடேஷ் அவர்கள் உடன் இணைந்து “ஏழையின் கோயிலை நாடினேன்” போன்ற பாடல்கள்.

சிவாஜி கணேசன் அறிமுகமான “பராசக்தி” படத்தில் ஆரம்ப காட்சியிலேயே “வாழ்க வாழ்கவே” என்று குசலகுமாரியின் நடனத்திற்கான பாடல் இசை சு.சுதர்சனம்.

ஜெமினியின் “மூன்று பிள்ளைகள்” படத்தின் தெலுங்குப் பதிப்பான “முக்குரு கொடுக்கு” படத்தில் கே.ஜி.மூர்த்தியின் இசையில் வி.லி.க்ஷி., ழி.லி.கானசரஸ்வதி இணைந்து “ஆ.ரகுராமுனி” பாடலைப் பாடியிருந்தனர்.

கே.வி.மகாதேவன் இசையமைத்த “நால்வர்” (1953) படத்தில் வி.லி.க்ஷி.க்கு 4 பாடல்கள். திருச்சி லோகநாதனுடன் “வான் மீதிலே”, மற்றும் ‘ஸோலோவாக “இன்பம் கொல்லுதே”, “மயிலே” மற்றும் “இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி வீசும் நிலவே.” ஆகியவை.

இதே 1953 ல் “கோடரிக்கம்” எனும் தெலுங்குப்படத்தில் சி.ழி.பாண்டுரங்கன் இசையில் “மகா கணபதி கஜானனா” மற்றும் “இல்லாள்ளு.. இல்லாள்ளு” ஆகிய பாடல்களைப் பாடியிருந்தார்.

இதே ஆண்டு வெளிவந்த “இன்ஸ்பெக்டர்” படத்தில் ஜி.கோவிந்தராஜூலு நாயுடு இசையில் மிகப்பிரபலமான “இமய மலைச் சாரலிலே” பாடல் அனைவரையும் கொள்ளை கொண்டது.

கி.வி. ராஜாவுடன் “இன்பக்குயில் குரலினிமை” என்ற டூயட்டும் இந்தப் படத்தில் பிரபலம். இதன் தெலுங்குப் பதிப்பில் “மரபயேன மோஹனா”, “மாரா சுகுமாரா” மற்றும் “மூடப்ப தீனன” போன்ற பாடல்களைப் பாடியிருந்தார் வி.லி.க்ஷி.

டி.ஆர். ராஜகுமாரி சிவாஜி கணேசன்- பத்மினி நடித்த “அன்பு” (1953) படத்தில் “இசை பாடி” மற்றும் கி.வி. ராஜாவுடனான டூயட் “ஆடவரே நாட்டினிலே” பாடல்கள் பிரபலம்.

மீண்டும் சித்தூர் வி.நாகைய்யா அத்தப்பள்ளி ராமராவ் கூட்டணியில் “என் வீடு” படப் பாடல்கள்.. “கொஞ்சும் மொழி மைந்தர்களே..” சாரங்கா ராகத்தில் ஜி.கி.மோதியுடன் ஒரு முறையும் ராதா ஜெயலட்சுமியுடன் ஒரு முறையும் மனதை வீட்டு நீங்காமல் நிலைத்து நிற்கும்.

இதன் தெலுங்குப் பதிப்பான “நா இல்லு” படத்தில் “அடிகடிகோ ககன சீமா..” மற்றும் தியாகராஜ கிருதியான “ரா.. ராமா.. இண்டி தாகா..”வும் இடம்பெற்றிருந்தன.

“கண்கள்” படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் “இன்ப வீணையை மீட்டுது”; பி.லீலாவுடன் இணைந்து ஏ. தட்சிணாமூர்த்தி இசையமைப்பில் “ஆசைமகன்” படத்திற்காக “கலைகள் மிகுந்த எங்கள் தமிழ் வாழ்கவே” வி.கி.ஞானமணி இசையில் “உலகம்” படத்திலிருந்து “என் ஜீவனிலே” மற்றும் கி.வி. ராஜாவுடன் இணைந்து “உன் காதலால் என் அன்பெல்லாம்” போன்ற பாடல்கள் 1953-ன் ஹிட் பாடல்கள் வரிசையில் சேர்ந்தன.

ஜி.ராமநாதன் இசையில் புதுயுகம் (1954) படத்தில் “கலையே புவியாரைக் கவரும்”, ஜி. கோவிந்தராஜூலு நாயுடு இசையில் “கள்வனின் காதலி” (1955) படத்தில். கானசரஸ் வதியுடன் இணைந்து “தமிழத்திருநாடு தன்னை..” ஜி.ராமநாதன் இசையில் “மகேஸ்வரி” படத்தில் “அந்தநாளும் எந்தநாளோ” மாஸ்டர் வேணுவின் இசையில் “காலம் மாறிப்போச்சு” படத்தில் “எண்ணம் அதுஎல்லாம்” மற்றும் “வள்ளியின் செல்வனுக்காக டி.வி. ரத்தினத்துடன் “விளையாடும் தெய்வமடி” போன்ற பாடல்கள் வி.லி.க்ஷி.க்குப் புகழ் சேர்த்தன.

1956ம் ஆண்டு வெளிவந்த படம் “கண்ணின் மணிகள்” எஸ்.வி. வெங்கட்ராமன் இசையில் வி.லி.க்ஷி.க்கு 4 பாடல்கள். “நல்ல வீணை இதே”, “வெள்ளிநிலவினிலே”, “ஆராரோஆசைக் கண்மணியே” மற்றும் “அன்பின்தீபமிதே” ஆகியவை இதே ஆண்டு ஆர்.சுதர்சனம் இசையில் “குலதெய்வம்” படத்தில் “வாராயோ என்னைப்பாராயோ” மற்றும் “ஆணும் பெண்ணும் வாழ்விலே..” என 2 பாடல்கள நாம் அதிகம் கேட்டிராத “செந்தமிழா எழுந்து வாராயோ” என்ற “மதுரைவீரன்” படப் பாடலும், கே.வி. மகாதேவன் இசையில் “தாய்க்குப் பின் தாரம்” படப்பாடலான “நாடு செழித்திட நாளும் உழைத்திடவும்”, ஜி.ஸி. பாப்பா இசையில் “ராஜா ராணி” படத்தில் “வாங்க வாங்க இன்றிரவு” “மணிப்புறா..புது மணிப்புறா”, “இன்ப நன்நாள் இதே” மற்றும் ழி.லி.கானசரஸ்வதியுடன் “ஆனந்த நிலை பெருவோம்” பாடல்களும் 1956-ல் வி.லி.க்ஷி. க்கு கிடைத்த பொக்கிஷங்கள்.

1957-ல் “சக்கரவர்த்தி திருமகள்” படத்தில் ஜி.ராமநாதன் இசையில் “எந்தன் உள்ளம் கொள்ளை கொள்ள வந்த நீ யாரோ?” என்ற பாடலைப் பாடியிருந்தார். 1958-ல் “மாங்கல்ய பாக்கியம்” படத்தில் ஜி.ராமநாதன் இசையில் பி.லீலாவுடன் “நெஞ்சத்திலே அச்சம் இல்லாதவர்”, “அன்னையே பராசக்தி”, மற்றும் சீர்காழி கோவிந்தராஜன், கி.றி.கோமளா, ரி.ஜமுனாராணி மற்றும் கி.யி.ரத்தினமாலா ஆகியோருடன் இணைந்து மிக நீண்ட தொரு “அனுசூயா கதாகாலட்சேப பாடலைப் பாடியிருந்தார்.

1959-ல் ஆர் சுதர்சனம் இசையில் “மாமியார் மெச்சிய மருமகள்” படத்தில் 5 பாடல்கள் “கண்ணா வா..”, கி.றி.கோமளாவுடன் “மைத்துனரே மைத்துனரே”, “விரல்மோதிரம்”, “இலவு காத்த கிளி போல்” மற்றும் “இங்கே இருப்பதா.. அங்கு வருவதா..” ஆகியவை “கல்யாணிக்குக் கல்யாணம்” படத்தில் பி.லீலாவுடன் “ஆனந்தம் இன்று ஆரம்பம்,” “ஜெயபேரி” தெலுங்குப் படத்தின் தமிழாக்கமான “கலைவாணன்” படத்தில் “காதல் சிலை ஆடுதே”, ஜி.ராமனாதன் இசையில் ழி.லி.கானசரஸ்வதியுடன் “மணிமேகலை” படத்தில் “பழங்காலத் தமிழர்களின் வாழ்க்கை முறை”, ஜி.நி. லிங்கப்பா இசையில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து வாசஸ்பதி ராகத்தில் “கன்னியின் சபதம்” படத்தில் “ஆட்டத்தில் சிறந்தது பித்தலாட்டம்”, நி. ராமனாதன் இசையில் ராதா ஜெயலஷ்மியுடன் இணைந்து “பிரெசிடெண்ட் பஞ்சாட்சரம்” படத்தில் “ஒளி படைத்த கண்ணினாய் வா..வா..வா” போன்ற பாடல்களை 1959-ல் வழங்கியிருந்தார்.

சிவாஜி கணேசனின் உணர்ச்சி பொங்கும் வசனங்களுடன் ஷி.ராஜேஸ்வர ராவ் இசையில் “பெற்ற மனம்” (1960) திரைப்படத்தில் “சிந்தனை செய்யடா” என்ற வித்தியாசமான சோகப்பாடல்.

விசுவநாதன் – ராமமூர்த்தி இசையில் “மன்னாதி மன்னன்” படத்தில் சுத்த தன்யாசியில் “கலையோடு கலந்தது உண்மை” நி.கோவிந்தராஜூலு நாயுடு இசையில் “ராஜபக்தி” படத்தில் “கற்க கசடற” மற்றும் “திலகம்” படத்திலிருந்து சு.சுதர்சனம் இசையில் “காத்திருந்த கண்ணுக்கு ஒளி தந்தது,” “மனசுக்குள்ளே மறைச்சு வைக்க முடியலே சீர்காழி கோவிந்தராஜனுடன் ஒரு டூயட் மற்றும் ஜி.ஷி பகவதியுடன் “ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா” போன்ற பாடல்கள் 1960-ல் வி.லி.க்ஷி.க்கு மேலும் புகழ் சேர்த்தன.

1961-ல் கொங்கு நாட்டுத் தங்கம் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் “இருந்தும் இல்லாதவரே”, க்ஷி.கி.கல்யாணம் இசையில் “மல்லியம் மங்களம்” படத்தில் “அவர் இன்றி நான் இல்லை” மற்றும் வி.ஷி.விசுவநாதன், ராமமூர்த்தி இசையில் “மகனே கேள்” படத்தில் அற்புதமான கல்யாணி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் “கலை மங்கை உருவம் கண்டு காதல் கொண்டு..” போன்று பல சுவையான இசைக் கனிகளை நமக்களித்துள்ளார் வி.லி.க்ஷி.

ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதரின் “சிவகாமேச்வரீம் சிந்தயே..” (கல்யாணி), “மாயே த்வம்” (சுத்த தரங்கிணி) 1952-ல் வெளியான “காஞ்சனா” படத்தில் இடம் பெற்ற இப்பாடல்களை சினிமாவிற்காக வி.லி.க்ஷி. இசைத்தார் என்று சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு சுத்தமான, காத்திரமான சம்பிரதாயமான சங்கீதம் வி.லி.க்ஷி. யினுடையது! இவர்பாடிய இன்னும் சில பாடல்களின் பட்டியலைப் பாருங்கள்.

கி.றி.கோமளாவுடன் இணைந்து ஜெமினியின் “மூன்று பிள்கைள்” படத்தில் (1952) “அந்த ராம சௌந்தர்யம்” (கேதாரகௌளை); “என் வீடு” (1952) படத்தில் தியாகராஜரின் “ரா ராமா இண்டி தாகா (அசாவேரி); “தாயே யசோதா” (குந்தலவராளி) ‘குலதெய்வம்’ (1956); காளிதாசனின் சியாமளா தண்டகம் சுலோகம் “மாதா மரகத சியாம (ராகமாலிகை) “சௌபாக்கியவதி” (1957) படத்தின் டைட்டில் இசை; மெல்லிசை கலந்த இன்னிசையாக; “குயிலே உனக்கனந்தகோடி நம்ஸ்காரம்” ‘மனிதன்’ (1953); “இமயமலைச் சாரலிலே” “மனிதனும் மிருகமும் (1953); துள்ளும் மோகன ராகத்தில் “சோலை நடுவே ஓடி” மனம் போல மாங்கல்யம் (1953); “என்னுடலும் உள்ளக் காதலும்..” (சுத்தசாவேரி) கோடீஸ்வரன் (1955); ‘கண்ணின் மணியே வா’ ‘வள்ளியின் செல்வன் (1955) ‘மாயாவதி படத்தில் பாடல் வரிகளே இல்லாமல் வெறும் மோகன ராகத்தில் ஹம்மிங் மட்டுமே!

கல்யாணி ராகத்திற்கும் வி.லி.க்ஷி.க்கும் ஓரு தனி உறவே உண்டு “வைரமாலை” (1954) படத்தில் “செந்தாமரைக் கண்ணனே” ஒரு அழகான கல்யாணி விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில்! ஜி.ராமனாதன் இசையில் “தூக்குத் தூக்கி” படத்தில் “வாரணம் ஆயிரம்” வசந்தமான கல்யாணி! 1959-ல் வெளிவந்த “காவேரியின் கணவன்” படத்தில் “வண்ணத் தமிழ் சொர்ணக்கிளி” வண்ண மயமான கல்யாணி!

“விக்கிரமாதித்தன்” (1962) படத்தில் ராஜேஸ்வர ராவ் இசையில் “அதிசயம் இவனது அறிவு மயம்” வித்தியாசமான கல்யாணி! றி.சலபதிராவ் இசையில் “மீண்ட சொர்க்கம்” (1960) படத்தில் பரதக் கலைக்குப் புஷ்பாஞ்சலி செய்யும் கல்யாணி “ஆரும் அருள் ஜோதி..”!

‘ராஜாதேசிங்கு’ (1960) படத்தில் ஜி.ராமனாதன் இசையில் இவர் பாடிய “பாற்கடல் அலை மேலே..” ராகமாலிகைப் பாடல் இன்றளவும் பரத நாட்டிய கச்சேரிகளில் இடம் பெற்று வருகின்றது.

மேலும் சில பிரபலமான நாட்டியப் பாடல்கள் “கதவை சாத்தடி” மற்றும் பாரதிதாசனின் “ஆலையின் சங்கே நீ ஊதாயோ” ரத்தக்கண்ணீர் (1954) இசை சி.ஷி. ஜெயராமன்; மதுரை வீரன் (1956) படத்தில் “ஆடல் காணீரோ” “வணங்காமுடி” (1957) படத்தில் “வாவா..வளர்மதியே வா..”; கற்புக்கரசி படத்தில் பி.லீலாவுடன் இணைந்து “விழியோடு விளையாடும் கலைச்செல்வமே” (ஜி.ராமனாதன் இசை); “தங்கப் பதுமை” (1959) யில் சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இணைந்து ‘வருகிறாள் உன்னைத் தேடி”, ‘மன்னாதி மன்ன’ னில் (1960) விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் லதாங்கி ராகத்தில் “ஆடாத மனமும் உண்டோ?” ஜி.வி.சௌந்தரராஜன் துணைக்குரலுடன்! பார்த்திபன் கனவு (1960) படத்தில் யமன் கல்யாண் ராகத்தில் “அந்தி மயங்குதடி” மற்றும் அதே படத்திலிருந்து “முன்னம் அவன் நாமம் கேட்டாள்” மற்றும் “வடிவேலும் திரிசூலமும் தோன்றும்” (இசை: வேதா) போன்ற பாடல்கள்.

மேலும் இவரது மறக்க முடியாத டூயட்கள்: ‘அந்தமான் கைதி’ (1952) “காணி நிலம் வேண்டும்” சி.ஷி. ஜெயராமனுடன் ஜி.கோவிந்தராஜூலு இசையில் ‘இன்ஸ்பெக்டர் (1953) “வருவாய் மன மோகனாஞ்” க்ஷி.ழி.சுந்தரத்துடன், ஜி.ராமனாதன் இசை “கூவாமல் கூவும் கோகிலம்” மற்றும் “வஞ்சம் இதோ ”திருச்சி லோக நாதனுடன் ‘வைரமாலை’ (1954) படத்திற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ‘கற்புக்கரசி’ (1957) ‘கனியோ பாகோ கற்கண்டோ” றி.ஙி.ஸ்ரீநிவாசுடன் ஜி.ராமனாதன் இசையில் ‘மாமியார் மெச்சிய மருமகள்” (1959) ‘மோகன ரங்கா என்னைப் பாரடா’ சீர்காழி கோவிந்தராஜனுடன் சு.சுதர்சனம் இசை!

இப்படி இன்னும் அநேகம் பாடல்கள் உண்டு. தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடகிகள் வரிசையில் வி.லி.க்ஷி.க்கு என்றுமே தனியான சிம்மாசனம் உண்டு. அது மாற்றுக் கருத்து கூற முடியாத உண்மை.

தமிழ் திரைப்பட உலகில் தடம் பதித்த வி.லி.க்ஷி. தெலுங்குத் திரைப்பட உலகிலும் முத்திரை பதித்தள்ளார்.

1951-ல் வெளிவந்த மணமகள்’ படத்தின் தெலுங்குப் பதிப்பான “பெள்ளி கூத்ரு” படத்தில் இசையமைப்பாளர் சி.ஸி.சுப்பராமன் அவர்களின் இசையில் அவரோடு இணைந்து கல்யாணி ராகத்தில் இவர் பாடிய “விரராஜூலு வலபே”யை மறக்க முடியுமா? தர்மபுரி சுப்பராய ஐயரின் கமாஸ்ராக ஜாவளியான “மருபாரி”யை ஒற்றி அமைந்த “சாலு சாலு நவமோகனா” (கமாஸ்) மற்றும் காம்போதியில் “சூச்சிசூச்சி” ஆகிய பாடல்கள் ராஜசுலோசனாவின் நடனத்திற்காக “காள ஹஸ்தி மாகாத்மியம்” படத்தில் வி.லி.க்ஷி. பாடி அசத்தியவை!

“இரு சகோதரிகள்” (1957) படத்தில் பி.லீலாவுடன் மிக நீண்டதொரு நாட்டியப் பாடலான “தாயே உன் செயலல்லவோ” என்ற பாடலைப் பாடியிருந்தார். இதன் தெலுங்குப் பதிப்பான “பலே அம்மாயிலு”வில் இதே ஜோடி “கோபால ஜாகேலரா” பாடலைப் பாடியிருந்தார்கள் இசை ராஜேஸ்வரராவ் – அனுமந்தராவ்.. “மாயா பஜார்” (1957) படத்தில் “கனகசௌபாக்யவதி ரேவதி தேவி,” கி.க்ஷி.வி.ன் “பூகைலாஸ்” படத்தில் குமாரிகமலாவின் நடனத்திற்காக “முன்னீட பவளிஞ்சு நாகசயனா” “ஜெயபேரி” (1959)யில் ராஜசுலோசனாவின் நடனத்திற்காக ஹிந்தோளம், பந்துவராளி பிலஹரி ராகங்களில் “நீவெண்ட நெரஜான வௌரா” பாடல்களைத்தான் சொல்லாமல் இருக்க முடியுமா? “ரங்குலராட்ணம்” (1966) என்ற படத்தில் ஷி.ராஜேஸ்வரராவ்- ஙி.கோபாலம் இருவரின் இசையில் கி.றி.கோமளாவுடன் இணைந்து தசாவதாரப் பாடலான “சேப ரூபமுன” பாடலை உணர்ச்சிப் பொங்கப் பாடியிருந்தார் வசந்தகுமாரி.

1950ல் வெளிவந்த பக்ஷராஜா ஸ்ரீராமுலு நாயுடுவின் “பிரசன்னா” எனும் மலையாளப் படத்தில் வி.ஷி. ஞானமணி இசையில் பின்னணி பாடி மலையாளத் திரையுலகில் பிரவேசித்தார் வி.லி.க்ஷி.

லலிதா-பத்மினி- ராகினி ஆகியோர் நடித்திருந்த அப்படத்தில் “கான மோஹனா ஹரே கோபாலா”, “கலாநிகேதே கேரள மாதே.. நமஸ்தே நமஸ்தே” “தகருகயோ சகல மெந்தன்” போன்ற பாடல்களைப் பாடியிருந்தார். தவிர “ஜாதினவரம் நீதி ரஹிதமே” எனும் மேலைநாட்டு (ஷ்மீstமீக்ஷீஸீ) பாணியிலும் பாடி பிரம்மிக்க வைத்தார்.

தியாகராஜரின் “ஜகதா ஆனந்தகாரகா” (நாட்டை), காம்போதி, சண்முகப்ரியா உள்ளிட்ட ராகங்களில் ராகமாலிகையாக பி.லீலாவுடன் “ஜனனீ ஜயிக்க நீனாள்..” மற்றும் “சரணம் மயில்வாகனா” (ஆரபி) போன்ற பாடல்களை “ஆஷாதீபம்” படத்திற்காக 1953-ல் ஏ.தட்சிணாமூர்த்தி இசையில் பாடியிருந்தார்.

மகாராஜாசுவாதித்திருநாள் இயற்றிய சுரட்டிராகப் பதமான “அலர்சர பரிதாபம்” மற்றும் “மணிவர்ணனே” ஆகிய பாடல்களை 1956-ல் “கூடப்பிறப்பு” படத்திற்காக ரி.ராகவன் இசையில் பாடியிருந்தார்.

ஷி.வி. சுப்பைய்யா நாயுடு சி.ராமச்சந்திரா இசையில் ராகினியின் நடனத்திற்காக “தஸ்கரவீரன்” (1957) படத்தில் “மாயாமோகம் மாராத்தே..” பாடல் அனைவரையும் கவர்ந்திழுத்தது.

நி. தேவராஜன் இசையில் “சதுரங்கம்” (1959) படத்தில் “காத்தே வா கடலே வா..” மற்றும் “ஓடக் குழலும்” பாடல்கள் “சீதா” 1960-ல் ஏ.தட்சிணாமூர்த்தி இசையில் “கண்ணே நூகரு ஸ்வாக்க சுகம்” எனும் பாடல். “உம்மிணித் தங்கா” (1961) படத்தில் பத்மினி (அர்ஜூனன்) ராகினி (கிருஷ்ணன்) இருவருக்காக கதகளி நடனப் பாணியில் கீதோபதேசம் பாடலை பி.லீலா, வி.லி.க்ஷி., ஏ.தட்சிணாமூர்த்தி பாடியிருந்தனர்.

“கிருஷ்ண குசேலா” (1961)ல் ‘வர்ணிப்பது எங்கிணே’ இசை ரி.ராகவன், “சுசீலா” (1963) மற்றும் “பிஞ்சு ஹ்ருதயம்” (1966) படங்களில் ஏ.தட்சிணாமூர்த்தி இசையில் “தாலோலம்” மற்றும் “கானவும் லயவும் நீயல்லே” ஆகிய பாடல்களை பாடி அசத்தினார் வசந்தகுமாரி.

1956ல் வெளிவந்த “சோரி சோரி” இந்தி திரைப்படத்தில் நடனமணி கமலாவிற்காக (மோகனம் காபி ராக சுவரங்களோடு கூடிய) ஹிந்தோள ராகத் தில்லானாவைப் பாடி பிரமிக்க வைத்தார் வி.லி.க்ஷி. நடன அமைப்பு தண்டாயுதபாணி பிள்ளை.

கன்னடத் திரையுலகம் மட்டும் விதிவிலக்கா என்ன? ‘பேடர கண்ணப்பா’ (1954) படத்தில் சு.சுதர்சனம் இசையில் “தாரிகாடு” எனும் பாடலைப் பாடியிருந்தார். “க்ஷறிராப்தி வரதாம நாகசயனா” பாடல் “பூகைலாஸ்” (1958) கன்னட பதிப்பிற்காக இவரது குரலிலேயே ஒலித்தது.

“ஆடினோ ரங்கா” எனும் புரந்தரதாசர் தேவர்நாமாவை “ஸ்ரீ புரந்தர தாசரு” (1967) படத்திற்காக சி.ழி.பாண்டுரங்கன் இசையில் வழங்கியிருந்தார். ஞிக்ஷீ. வி.பாலமுரளி கிருஷ்ணா இசையமைத்து தேசிய விருது பெற்ற “ஹம்ஸகீதே” (1975) படத்தில் ஜெயதேவர் அஷ்டபதியை பாடியிருந்தார். அஷ்டபதிகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக இப்படத்தில் ஜி.நி.லிங்கப்பா இசையமைத்திருந்தார்.

இத்தோடு திரையுலகிற்கு முழுக்குப் போட்டுவிட்டு கச்சேரிமேடைக்கே வந்து சேர்ந்தார் வசந்தகுமாரி. பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் வென்று 31.10.1990 இறைவனடி சேர்ந்தார் வி.லி.க்ஷி.

கர்நாடக இசை, மெல்லிசை, நாட்டியப் பாடல்கள், பக்திப்பாடல்கள், கிராமிய மெட்டில் அமைந்த பாடல்கள், ஜிப்சி பாடல், மேலைநாட்டு சாயல் கொண்ட பாடல் என்று எதையும் விட்டு வைக்கவில்லை இந்த இசைக்குயில்.

1956-ல் வெளிவந்த “அமர தீபம்” படத்தில் குருநாதர் நி.ழி.பாலசுப்பிரமணியம் மெட்டமைத்து ஜி.சலபதிராவ் – நி.ராமனாதன் இசையில் சுபபந்துவராளி ராகத்தில் ரி.ஷி.கோபாலகிருஷ்ணன் இயற்றியிருந்த “எங்கே மறைந்தனையோ?” எனும் பாடலை மிகவும் உருக்கமாகப் பாடியிருப்பார் வி.லி.க்ஷி. எனும் வசந்த ராகமே நீ எங்கே மறைந்தனையோ?

– சங்கர் வெங்கட்ராமன்

-நன்றி: சங்கீத இசை மலர் – 2018 நவம்பர் இதழ்

Comments (0)
Add Comment