நாடு முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கைக்கு தேசிய அளவில் ‘நீட்’ தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க ஜே.இ.இ. என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களின் மன உளைச்சலை போக்குவதற்காகவே இந்த நுழைவுத் தேர்வு வருடத்துக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. மாணவர்கள் இரண்டு முறை தேர்வில் பங்கேற்று எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு இந்தத் தொழில்நுட்ப உயர்கல்வியில் சேர்ந்து படிக்கலாம்.
இதேபோல் நீட் தேர்விலும் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
09.02.2021 02 : 10 P.M