பெங்களூருவில் இருந்து திருமதி சசிகலா தமிழகம் வந்து சேர்ந்திருக்கும் நிலையில், ‘எம்.ஜி.ஆர் புரட்சி சங்கம்’ சார்பில் அதன் மாநிலச் செயலாளர் மோதிர சண்முகம் முன்வைக்கும் சில கோரிக்கைகள்.
- அதிமுக சார்பில் வைக்கப்படும் போஸ்டர்கள், பேனர்களில் மற்ற தலைவர்களின் படங்களைவிட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகைப்படம் பெரிதாக இருக்க வேண்டும்.
- சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்திற்கு ‘ஜானகி எம்.ஜி.ஆர் வளாகம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
- புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளான ஜனவரி – 17 ஆம் தேதியை ‘பொன்மனச் செம்மல்’ தினமாகக் கொண்டாட வேண்டும்.
- ஒரு அரசியல் தலைவர் எவ்வாறு மக்கள் தொண்டனாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்மாட்டி வைக்கப்பட வேண்டும்.
- ஜானகி அம்மாவின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாவும் வாழ்ந்த ராமாபுரம் இல்லத்தை முழுமையாக சீரமைத்து, இன்னும் மேம்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சென்னை தியாகராய நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க எம்.ஜி.ஆர் நினைவில்லத்தை அங்கீகரிக்கப்பட்ட அரசு நினைவில்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
08.02.2021 12 : 50 P.M