இளையராஜா: காலத்தின் வெளிச்சம்!

‘அன்னக்கிளி’ மூலம் தமிழ்த் திரையுலகிற்குள் நுழைந்த இசையமைப்பாளரான இளையராஜாவின் பன்முக இசையை வெளிப்படுத்தியது 80-கள் காலகட்டம்தான்.

‘நிழல்கள்’ மூலம் பொன்மாலைப் பொழுதை மறக்க முடியாத பொழுதாக்கினார். ‘ஜானி’யில் இழைய வைத்தார். முரட்டுக்காளை, சகலகலா வல்லவனில் கலகலக்க வைத்தார். அலைகள் ஓய்வதில்லையில் மனதில் அலையடிக்க வைத்தார்.

‘மௌன ராகம்’, ‘சிந்து பைரவி’, ‘நாயகன்’ என்று மனதை இதமாக வருடிக் கொடுத்தார். ‘நினைவெல்லாம் நித்யா’வில் பனிவிழும் மலர் வனமாக நம்மை நனைய வைத்தார். ‘சத்யா’வில் வளையோசை கலகலத்தது

‘சிந்து பைரவி’ படத்தில் இசையமைத்ததற்காக 1985-ல் தேசிய விருது இவருடைய திறமை தேடி தோளில் வந்தமர்ந்தது. இவருடைய இசையில் பாடியவர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், எஸ்.ஜானகியும், சித்ராவும் தேசிய விருதுகளைப் பெற்று உயரம் சென்றதற்குக் காரணம் ராசய்யா என்கிற மென்மையான இசை ஞானியின் தவத்தைப் போன்ற இசை.

03.02.2021    12 : 50 P.M

Comments (0)
Add Comment