நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஒரு தாய் மக்கள் நாம் என்போம்
ஒன்றே எங்கள் குலம் என்போம்
தலைவன் ஒருவன் தான் என்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
(ஒரு தாய்…)
பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம்
(ஒரு தாய்…)
உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்
(ஒரு தாய்…)
தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ்த் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்
(ஒரு தாய்…)
-1963ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘ஆனந்த ஜோதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
29.01.2021 12 : 40 P.M