ஆண்டுதோறும் காவல் அதிகாரிகளுக்கு நாட்டின் மிகப்பெரிய விருதான ஜனாதிபதி விருது, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி சிறந்த முறையில் புலனாய்வு செய்த வழக்குகளுக்கு அரசு இதுபோன்ற விருதுகளை வழங்குவது வழக்கமான நடைமுறையாக இருக்கிறது.
அதனடிப்படையில் இந்தாண்டு குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தொழில்நுட்பப் பிரிவு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், சிறப்பு காவல்துறை பட்டாலியனில் உள்ள ஐ.ஜி. பி.மணிகண்டகுமார் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 1994ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான மகேஷ்குமார் அகர்வாலுக்கு முன்னதாக தமிழக முதல்வரின் பொது சேவையில் சிறந்து விளங்குவதற்கான போலீஸ் பதக்கமும், சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கமும், கடமைக்கான சிறந்த பக்திக்கான முதலமைச்சரின் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.அன்பு மற்றும் சந்தோஷ் குமார் உட்பட 17 பேருக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
25.01.2021 2 : 30 P.M