“மொழிப்போர் தியாகிகளின் வரலாற்றை நாடறிய வேண்டும்” – எம்.ஜி.ஆர்!

மொழிப் போர் தியாகிகளின் நினைவுநாளையொட்டி (ஜனவரி-25) மீள்பதிவு…

1935 மற்றும் 1965 ஆகிய காலகட்டங்களில் தமிழகத்தில் கட்டாய இந்தித் திணிப்புக் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல இளைஞர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.

அவ்வாறு உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூறும் விதமாக நடைபெற்ற நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “உயிர் தமிழுக்கு – உடல் தழலுக்கு என்ற முழக்கத்தோடு வெந்தழலில் தன்னைப் பொசுக்கிய மொழிப் போர்த் தியாகிகளின் வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.

தமிழ் மீது பற்று கொண்ட மகத்தான தலைவர் எம்.ஜி.ஆர்

25.01.2021    01 : 10 P.M

Comments (0)
Add Comment