புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டேல் கார்னகி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர்.
அவரது How to Win Friends and Influence People என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மனிதர்களால் பின்பற்றப்பட்ட அவரது நம்பிக்கை மொழிகள் இங்கே…
உலகில் சிறந்த பணி என்பது முடியாது என்று கருதப்பட்டவைக்கு எதிராக செய்யப்பட்டதாகத்தான் இருக்கும்.
நீங்கள் தேனை சேகரிக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்காக தேன்கூட்டைக் கலைத்து விடாதீர்கள்.
நமக்கு என்ன தேவை என்பது பற்றி ஏன் பேசுகிறோம்? அது குழந்தைத்தனமானது. அபத்தமானது. ஒருவேளை, உங்களுக்கு எது தேவையோ அதில் நீங்கள் ஆர்வத்துடன் இருக்கலாம். எப்போதுமே நீங்கள் ஆர்வமாக இருக்கவேண்டும்.
வாழ்க்கையில் உங்களுக்கு போராடிக்கிறதா? ஒரு வேலையை நீங்கள் நம்பி, அதற்காக உங்கள் இதயத்தைத் தந்துவிடுங்கள். அதற்காக வாழுங்கள். அதற்காக உயிர்விடுங்கள். அப்போது நீங்கள் மகிழ்ச்சியை அறுவடை செய்வீர்கள்.
உங்களிடம் என்ன இருக்கிறது அல்லது நீங்கள் யார் அல்லது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் அல்லது மகிழ்ச்சிக்காவும் மகிழ்ச்சியற்றதற்காகவும் நீங்கள் செய்கிறீர்கள் என்பது பற்றியல்ல. நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றியது.
சூரியன் மறைவதற்குள் ஏதோவொரு மாய ரோஜா தோட்டத்தை நாம் எல்லாரும் கனவு கண்டுகொண்டிருக்கிறோம். ஆனால் நம் ஜன்னலுக்கு வெளியே பூத்திருக்கும் ரோஜாக்களை ரசிப்பதில்லை.
உங்களைத் தாக்கும் எதிரிகளைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்களைப் புகழ்ந்துரைக்கும் நண்பர்களைப் பார்த்து பயப்படுங்கள்.
மக்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது, மறந்துவிடாதீர்கள் அவர்கள் தர்க்கம் கொண்ட உயிரினங்கள் அல்ல. பெருமையும் கர்வமும் பாரபட்சமும் நிறைந்த உயிர்கள்.
எந்த மொழியிலும் மிகச் சுவையான மிக முக்கியான ஒலி என்பது பெயர்கள்தான்.
செயல்கள் வார்த்தைகளைவிட அதிகம் பேசுபவை.
புன்னகை கூறுகிறது: “உன்னை எனக்குப் பிடிக்கும். என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறாய். உன்னைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”
உங்களால் விவாதத்தில் வெற்றிபெறமுடியாது. உங்களால் முடியாது ஏனெனில், நீங்கள் அதில் தோற்றால் வெல்லலாம். நீங்கள் வென்றால் தோற்கலாம்.
அங்கீகாரத்துக்கும் புகழ்ச்சிக்கும் என்ன வேறுபாடு? அது எளிதானது. ஒன்று நேர்மையானது. அடுத்தது நேர்மையற்றது. ஒன்று இதயத்தில் இருந்து வருகிறது. மற்றது வாயில் இருந்து வருகிறது. ஒன்று சுயநலமற்றது. மற்றது சுயநலமானது. ஒன்று பிரபஞ்சத்தால் விரும்பப்படுவது. மற்றது கண்டனத்திற்குரியது.
செயலற்ற தன்மையே சந்தேகத்தையும் பயத்தையும் உற்பத்தி செய்கிறது. செயலோ நம்பிக்கையும் துணிச்சலையும் தருகிறது. நீங்கள் பயத்தை வெற்றிகொள்ள வேண்டுமானால், வெறுமனே வீட்டில் உட்கார்ந்து யோசிக்காதீர்கள். வெளியே செல்லுங்கள். பிஸியாக மாறுங்கள்.
வெற்றிகரமான மனிதன் தன் தவறுகளில் இருந்து பயனடைகிறான். மீண்டும் வேறு வழிகளில் முயற்சி செய்கிறான்.
ஒரு விவாதத்தில் சிறந்தவற்றைப் பெற அதை தவிர்ப்பதுதான் சிறந்த வழியாக இருக்கும்.
இன்று என்பது வாழ்க்கை. அந்த வாழ்க்கையே நிச்சயமானது. அந்த நாளை முழுமையாக பயன்படுத்துங்கள். எதிலாவது ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு நீங்களே விழிப்புடன் இருங்கள். ஒரு பொழுதுபோக்கை வளர்த்தெடுங்கள். உற்சாகத்தின் சிறகுகள் உங்களை தழுவட்டும். இந்த நாளை ஆர்வத்தால் நிரப்புங்கள்.
நம்முடைய பெரும்பாலான சோர்வுக்கு வேலை காரணமல்ல, கவலையும், விரக்தியும் மனக்கசப்பும்தான்.
தோல்விகளில் இருந்து வெற்றியை வளர்த்தெடுங்கள். ஊக்கமின்மையும் தோல்வியும்தான் வெற்றிக்கான நிச்சயமான படிக்கற்கள்.
வாய்ப்பை எடுத்துக் கொள்ளுங்கள். முழு வாழ்க்கையும் ஒரு வாய்ப்புதான். ஒரு காரியத்தைச் செய்வதற்கான எண்ணமும் துணிச்சலும் கொண்டிருந்தால், அந்த மனிதன் நெடுதூரம் செல்வான்.
நம்மிடம் எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. அவை பற்றி நமக்குத் தெரியவில்லை. நம்மிடம் கனவுகள் எதுவும் இல்லாமலேயே நம்மால் காரியங்களைச் செய்யமுடியும். நம்மால் செய்யமுடியும்.
முதலில் கடினமான வேலைகளைச் செய்யுங்கள். எளிதான வேலைகள் அதுவே தங்களைப் பார்த்துக்கொள்ளும்.
– தான்யா
22.01.2021 12 : 30 P.M