சென்னையில் அடையாறுக்குப் போகிற சாலையில், பெசன்ட் நகருக்குப் போகிற சிக்னலுக்கு முன்னால், இடதுபுறத்தில் இருக்கிறது இந்த நான்வெஜ் மெஸ்.
உள்ளே போனால் மதுரைப் பக்கத்து வாசனையுடன் மெனு.
“பழைய சோறு, நேத்து வைச்ச மீன், சின்ன வெங்காயம், பச்ச மிளகாய்’’ – இப்படி ஒரு வித்தியாசமான மெனு.
விலை 124 ரூபாய். மட்டன் சுக்கா, இறால், ஈரல் மசாலா, நல்லி எலும்பு, மூளை ஃப்ரை என்று ஏகப்பட்ட ஐட்டங்கள்.
ஆனால் மிதமான காரத்தோடு சாப்பிடும்போது தனிருசி.
கொஞ்சம் மாறுதலாகச் சாப்பிடலாமே என்று நினைக்கிறவர்கள் இங்கு சாப்பிட்டுவிட்டு, அப்படியே சற்றுத் தூரத்தில் உள்ள பீச் பக்கம் போய் ஒரு நடை நடந்தால், சாப்பாடும் உள்ளே சிரமமில்லாமல் இறங்கி அரைக்கிறக்கத்துடன் நன்றாக கண்ணசரலாம்!
குரு மெஸ் முகவரி:
T.N.H.B COMPLEX,
No-10, L.B Road,
Adyar, Chennai-600020
044-2440 4545
20.01.2021 05 : 05 P.M