76 வாரங்கள் ‘குமுதம்’ இதழில் தொடர் கட்டுரையாகப் பிரசுரமாகிய ‘ஒசாமஅசா’ (ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபங்கள்), குமுதம் குழுமத்தின் சேர்மன் திரு.வரதராஜனின் ஆர்வம் காரணமாக இப்போது புத்தகமாக வெளிவருகிறது.
அவர் சாதாரணமாக ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டாலே, அதில் ஒரு வேகம் தெரியும். ஊக்கத்துடன் முடித்து விட்டாரெனில் புயல்வேகம் தான்.
அந்தப் புயலில் சிக்கியதால்தான், என்னால் இந்தத் தொடரை ஆரம்பித்து, இடைவெளி இல்லாமல் முடிக்க முடிந்தது. அந்தப் புயலுக்கு என்னுடைய நன்றிகள்.
இந்தத் தொடர் கட்டுரைகளை நான் சொல்லச் சொல்ல, அதை முறையாகப் பதிவு செய்து கொண்டு, பின்னர் தொகுத்து எழுதிய ‘மணா’ பல வருடங்களாகவே எனக்கு நன்கு அறிமுகமானவர்.
‘துக்ளக்’கில் அவர் பணியாற்றியிருக்கிறார். நல்ல துடிப்புள்ள ஜெர்னலிஸ்ட். அவர் காட்டிய திறமை மற்றும் பொறுப்புணர்வு அசாத்தியமானது. அவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக, குமுதம் பத்திரிகையிலேயே இந்தக் கட்டுரைகளையும் படித்துவிட்டு, இப்போது புத்தமாகவும் இதை வாங்கி வைத்துக்கொள்ள தயாராக இருக்கும் வாசகர்களுக்கு என்னுடைய நன்றி.
– ‘ஒசாமஅசா’ தொடர் புத்தகமாக வெளிவந்தபோது, குமுதம் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ‘சோ’ தன் கைப்பட எழுதிய கடிதம்.
15.01.2021 01 : 00 P.M