தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து வரும் 15.01.2021 அன்று திருவள்ளுவர் நாளை முன்னிட்டு ‘வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி’ என்னும் தலைப்பில் இணைய வழியில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தவுள்ளன.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கோ.பார்த்தசாரதி அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில்,
தமிழ் வழியில் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று, தற்போது உத்திரப்பிரதேசத்திலுள்ள வாரணாசியில் சார் ஆட்சியராக பணியாற்றி வருபவரும், தனது ஆற்றல் மிக்க உரைகளால் இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருபவருமான திரு.ஆ.மணிகண்டன் இ.ஆ.ப. அவர்களும்,
சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தோற்றுநர் திருமதி.சந்திரிகா சுப்பிரமணியம் அவர்களும், தமிழ்நாடு திறந்தநிலைப் பலக்கலைக் கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியர் – இயக்குநர் முனைவர் சு.பாலசுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டு, “வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி” என்னும் பொருளில் கருத்தரங்க உரையாற்ற உள்ளார்கள்.
உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணாக்கர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் இணைய வழியில் கலந்துகொள்ளலாம். பங்கேற்பாளர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.
13.01.2021 02 : 30 P.M