தாய்மையைப் போற்றிய மாமனிதர்!

தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை.

“எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது நிகழ்ச்சிகளிலோ அவரைக் கண்டால் உடனே நான் எழுந்து நின்றுவிடுவேன். அவர் முன் உட்காரவே மாட்டேன்.

இதைக் கண்டு பலமுறை அவர் என்னிடம் செல்லமாக கோபித்துக் கொண்டு, “நீங்க நின்னா நானும் நிப்பேன். நீங்க உட்கார்ந்தா தான் நானும் உட்காருவேன்” என்பார். பிறகு உட்கார்ந்து கொள்வேன்.

‘தொழிலாளி’ படத்தில் ஒரு முக்கியமான காட்சி. “அம்மா எனக்கு வேலை கிடைச்சிடிச்சு”ன்னு சொல்லிகிட்டே அந்த வேலைக்கான கடிதத்தை என்னிடம் கொடுத்து ஆசி பெறுவார். அப்போது சற்றும் எதிர்பாராமல் திடுதிப்பென்று என் கால்களை கட்டிக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. “ஐயய்யோ எந்திரிங்க…” என்றேன்.

உடனே ஸ்டில் போட்டோகிராபர் நாகராஜன்ராவை கூப்பிட்டு அந்தக் காட்சியை உடனே ஸ்டில் எடுக்கும்படி கூறினார்.

படத்தில் இதுபோல் காலைக் கட்டிப்பிடித்து ஆசி பெறுவது போல் இருக்காது. என் அம்மாவிடம் ஆசி பெறுவதாக நினைத்து இதை செய்தேன் என்றார். அதை இன்று நினைத்தாலும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது”.

நன்றி: நடிகன் குரல் இதழ்

11.01.2021 12 : 30 P.M

Comments (0)
Add Comment