ஸ்டீபன் ஹாக்கிங் தன் 21-வது வயதில் Motor Neuron Disease என்கிற மூளை நரம்பினை பாதிக்கும் நோய் ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழந்து போகும் நிலையில் அதற்கு அன்றைய சூழலில் மருந்துவம் இல்லாத காரணத்தால் அவர் அதிகபட்சம் ஐந்து வருடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.
ஆனால் அந்த மனிதர் 76 வயது வரை வாழந்து, என்னற்ற அறிவியல் உண்மைகளை இவ்வுலகிற்கு அளித்து நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளின் வரிசையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
“இந்த இயற்கை விதிகளை தனக்குள் வைத்திருப்பவன் அவன் என்றால், இயற்கையை விஞ்சிய ஒன்று கிடையாது என்பது முடிவாகிறது. இயற்கை தான் கடவுள் என்று உங்கள் விருப்பமாக இருக்கலாம், அப்படி எதுவுமில்லை. இது தனித்து இயங்கக்கூடிய ஆற்றல் உடையது. எதிலிருந்தும் இந்தப் பேரண்டம் உருவாகவில்லை. ஒன்றை நம்புவதும், நம்பாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது.
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? என்று கேட்டால்
எதை விரும்புகிறோமோ அதை நம்புகிற உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. எளிமையான சொற்களில் சொல்ல வேண்டும் என்றால் “There is no God at all”
நன்றி : முகநூல் பதிவு
09.01.2021 10 : 50 A.M