பீட்சா, பர்கர் போன்ற உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உணவு வகைகள் அதிகளவு எடுத்துக் கொள்ளப்படும் தற்போதைய சூழலில் ஆரோக்கியமான உணவு வகைகளை குழந்தைகள் உட்கொள்ளச் செய்வது பெற்றோருக்கு கடினமான ஒன்றாக உள்ளது.
உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஆரோக்கியமான உணவாக கலவை தானிய உருண்டையைச் செய்து கொடுக்கலாம். அதன் செய்முறை குறித்து பார்க்கலாம்.
தேவையானவை:
கம்பு, கொள்ளு, பச்சைப் பயறு – கால் கப் அளவு
காராமணி, கோதுமை – கால் கப் அளவு
பொட்டுக்கடலை, எள் – கால் கப் அளவு
சர்க்கரை – இரண்டரை கப்
தேங்காய் துருவல் – அரை கப்
நெய் – அரை கப்
செய்முறை:
தானிய வகைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுத்து, சற்று ஆறியதும் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து நைஸான மாவாக அரைத்துக் கொள்ளவும்.
தானிய மாவுடன் பொட்டுக்கடலை, பொடித்த சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து, உருக்கிய நெய் ஊற்றி பிசிறி, உருண்டை பிடிக்கவும் (சரியாக பிடிக்க வரவில்லை என்றால், சிறிது பால் தெளித்து உருண்டை பிடிக்கலாம்).
புரோட்டீன் சத்து நிறைந்த இந்த பலகாரத்தை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
08.01.2021 02 : 05 P.M