டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும்.

நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறில் தலா 6 செ.மீ மழையும் அறந்தாங்கியில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

வரும், 6, 7-ம் தேதிகளில், மாநிலத்தின் சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04.01.2021 04 : 24 P.M

Comments (0)
Add Comment