உன்னையும், உழைப்பையும் நம்பு!

நினைவில் நிற்கும் வரிகள்:

***

காடு கொடுத்த கனியிருக்கு
கழனி வெளஞ்ச நெல்லிருக்கு
ஓடு திறந்த பஞ்சிருக்கு
உண்ண உடுத்த வகையிருக்கு…
                                                    (காடு…)

சிந்திய வேர்வை நிலத்தில் ஓடிச்
சிறுகச் சிறுக ஆறாச்சு  –
அதை நம்பிய பேர்கள் வாழ்ந்ததாலே
நாடு நகரம் ஊராச்சு…
                                                    (காடு…)

தேக்கு சந்தனம் பாக்கு மூங்கில்
தேங்கி நிக்குது பூமியிலே –
இதைக்காக்கக் தெரிஞ்சு காத்து வந்தா
கடனும் உடனும் தேவையில்லே
                                                    (காடு…)

-1963 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நீதிக்கு பின் பாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

05.01.2021 04 : 24 P.M

Comments (0)
Add Comment