ஆண்டுதோறும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ‘தாதாசாகேப் பால்கே’ தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருது ‘டூலெட்’ படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது ‘அசுரன்’ படத்திற்காக தனுஷுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித்குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.
மொழிவாரியாக விருது பட்டியலின் விவரம்:
தமிழ் சினிமா விருதுகள்:
பன்முகத்தன்மை வாயந்த நடிகர் – அஜித்குமார்
சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை – ஜோதிகா (ராட்சசி)
சிறந்த இயக்குனர் – ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த படம் – டூ லெட்
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத்
மலையாளம்:
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் – மோகன்லால்
சிறந்த நடிகர் – சுராஜ் வெஞ்சரமூடு (ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25)
சிறந்த நடிகை – பார்வதி திருவோத்து (உயரே)
சிறந்த இயக்குனர் – மது சி.நாராயணன் (கும்பலங்கி நைட்ஸ்)
சிறந்த படம் – உயரே
சிறந்த இசையமைப்பாளர் – தீபக் தேவ்
தெலுங்கு
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் – நாகார்ஜுனா
சிறந்த நடிகர் – நவீன் பாலிஷெட்டி (ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா)
சிறந்த நடிகை – ராஷ்மிகா மந்தனா (டியர் காம்ரேட்)
சிறந்த இயக்குனர் – சுஜீத் (சாஹோ)
சிறந்த படம் – ஜெர்சி
சிறந்த இசையமைப்பாளர் – எஸ்.தாமன்
கன்னடம்
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் – சிவராஜ்குமார்
சிறந்த நடிகர் – ராக்ஷித் ஷெட்டி (அவனே ஸ்ரீநாம்நாராயணா)
சிறந்த நடிகை – தான்யா ஹோப் (யஜமானா)
சிறந்த இயக்குனர் – ரமேஷ் இந்திரா (பிரிமியர் பத்மினி)
சிறந்த படம் – முகஜ்ஜியா கனசுகலு
சிறந்த இசையமைப்பாளர் – வி.ஹரிகிருஷ்ணா
02.01.2021 03 : 33 P.M