கதிர்காம முருகனை தரிசித்து இருக்கிறீர்களா?
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் முருகனுக்கான கோவில்கள் இருந்தாலும் கதிர் காமத்தில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்குத் தனிச்சிறப்பு உண்டு.
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட அரியலூர் ஆஞ்சநேயா் சிலை!
கடந்த 2012 ஆம் ஆண்டில், அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த வெள்ளூா் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயா் ஆகிய உலோகச் சிலைகள் திருடுபோனது. இது தொடா்பாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் விசாரித்து வந்தனா். இதில், திருடுபோன ஆஞ்சநேயா் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள தனிநபரிடம் விற்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னா், ஆஞ்சநேயா் […]
பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்!
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலம்: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் லட்சக் கணக்கான பக்தர்களின் முழக்கத்திற்கு இடையே கோலாகலம் நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை தொடங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்காலமாக காட்சியளித்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். கள்ளழகர் […]
புனித ரமலான் நோன்பு துவங்கியது!
– இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள். இன்று வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, ரமலான் நோன்பு தொடங்கியது. தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்தார். […]
லட்சியத்திற்காக உருவான கோயிலில் திரண்ட லட்சக்கணக்கானோர்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் அண்ணன்மார் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் பொன்னர் – சங்கர் வீர வரலாற்றுச் சரித்திரம் நடைபெற்ற கோயில்கள் உள்ளன. இங்கு பொன்னர் – சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் உள்ளனர். இந்தக் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இந்த திருவிழா இந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
தமிழ் மந்திரங்கள் முழங்க நடந்த பழனி முருகன் கோயில் குடமுழக்கு!
திண்டுக்கல், உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு குடமுழக்கு நடைபெற்றது. இதையடுத்து 2019-ல் பாலாலய பூஜையுடன் குடமுழக்கு திருப்பணிகள் தொடங்கின. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அறங்காவலர் குழு, அலுவலர்கள் கூட்டத்தில் ஜனவரி 27-ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 18-ம் தேதி குடமுழக்கு விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கிய கலசஸ்தாபனம் நடந்தது. 23-ம் தேதி மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து […]