ஓவிய மாணவர்களை உருவாக்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி!
பிரபல நவீன ஓவியர் ராஜசேகர், ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றை கடலூரில் நடத்திவருகிறார். அங்கு பயிலும் மாணவர்களுக்கு நேரடி களப்பயிற்சிகளை வழங்கிவருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு பயிற்சி பற்றி அவர் பகிர்ந்துகொண்ட தகவல். கடந்த ஞாயிற்றுக்கிழமை, கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாக்கம் அழகர் கோயிலுக்கு காலை சரியாக 8:35 மணியளவில் திட்டமிட்ட இடத்தில் மாணவர்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். மகிழ்ச்சியான அனுபவமாகவே உணர்ந்தேன். ரம்மியமான சூழல். அந்த கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேண்டுதல் பொம்மைகள். கோபி என்ற மாணவருடன் […]
நறுமுகையே… நறுமுகையே…!
பாம்பே ஜெயஸ்ரீயின் பெயரை ரசிகர்கள் உற்றுநோக்க வைத்த பாடலாக அமைந்தது, ‘இருவர்’ படத்தில் இடம்பெற்ற ‘நறுமுகையே.. நறுமுகையே..’ பாடல்.
பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க நிகழ்ந்த பரதநாட்டிய அரங்கேற்றம்!
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்கள். தோற்றத்திற்கும் அதன் செயல்பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதே இதன் பொருள். கடுகு – அளவில் சிறியதாக இருந்தாலும், தேவையான அளவு காரத்தைத் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற பழமொழிகள் தமிழில் தோன்றியுள்ளன. அதுபோலத்தான் சிலரின் திறமையும். வயதிலும் தோற்றத்திலும் சிறியதாக இருந்தாலும் அவர்களது வீரியமும் அதை வெளிப்படுத்தும் விதமும் பிரம்மிக்க வைக்கும் விதமாக இருக்கும். இதற்கு உதாரணமாகத் திகழ்ந்துள்ளார் திரு. விஜயகிருஷ்ணா – திருமதி சரஸ்வதி அவர்களின் மகள் ஸ்ருதி […]
வானேறும் விழுதுகள்: புதிய அலையை உருவாக்கிய புகைப்படங்கள்!
சென்னையில் வானேறும் விழுதுகள் என்ற புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதை கியூரேட் செய்தவர் சிறந்த புகைப்படங்களுக்காக சர்வதேச விருதுகள் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜெய்சிங் நாகேஸ்வரன்.
எல்லோருக்குமான இசைச் சமூகம் உருவாகும்!
கர்நாடக இசைக்கலைஞர் ஒருவரின் நியாயமான பெரும் கனவுகளில் ஒன்று சென்னை, சங்கீத வித்வத் சபை (மியூசிக் அகாடமி) வழங்கும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவதாக இருக்கலாம். இசை உலகில் வழங்கப்படும் விருதுகளில் மிக மதிப்பு வாய்ந்ததாக இவ்விருது கருதப்படுகிறது. 1929 முதல் வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருதைப் பெறுவது தங்களது தகுதியை நிலைநிறுத்துவதாக, புகழுக்குப் புகழ் சேர்ப்பதாகச் கலைஞர்களும் எண்ணுகிறார்கள். எல்லா உயர்மதிப்பு விருதுகளையும் போலச் சங்கீத கலாநிதி விருதும் அவ்வப்போது விமர்சனங்களுக்கு உள்ளானதுண்டு. எம்.டி.ராமநாதன், டி.என்.ராஜரத்தினம் […]
பள்ளிப் பருவத்தில் படிப்பைவிட பாடுவதில் தான் அதிக ஆர்வம்!
சுற்றி மூன்றுபுறமும் உப்பணாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்னக் கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம். “எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு போக விரும்புறவங்க எல்லாம் கை தூக்குங்க…” ஆசிரியர் சொன்னதும் பல மாணவர்களும் கைதூக்க, தூக்காமல் உட்கார்ந்திருந்த மாணவன் குப்புசாமி. படிப்பதில் அவ்வளவு விருப்பமில்லை. வேதாரண்யம் அங்கிருந்து 14 கி.மீ. ஒன்பதாவது வகுப்புப் படிக்கக் காலையில் கிளம்பி அலுமினியச் சட்டியோடு போகும் போது உடம்பெல்லாம் களைத்துவிடும். பள்ளியில் உட்கார்ந்ததும் கண்ணைச் சுழற்றும். தூக்கம் […]