மறக்க முடியாத முகங்கள்

நினைவுகளின் உயிர்ப்பில் கி.ரா…!

“அய்யா.. நீங்க எப்போ இருந்து எழுத ஆரம்பிச்சீங்கய்யா?” “ தம்பீ.. என்ன கேட்டீங்க?” அதே கேள்வியை மறுபடியும் அதே தொனியில் கேட்டிருக்கிறார் கி.ரா.வுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த இளம் பத்திரிகையாளர். பதிலுக்கு பத்திரிகையாளரிடம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார் கி.ரா. “தம்பீ.. நான் உங்க கேள்விக்குப் பதில் சொல்றது இருக்கட்டும். முதல்லே நீங்க நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க…” “சரிங்கய்யா” “நான் எழுதினதிலே எதை நீ படிச்சிருக்க.. அதைச் சொல்லு பார்ப்போம்” “நான் ஒண்ணும் படிச்சதில்லீங்கய்யா.. ஆபிசில் கேள்விகளை […]

நடிகர் திலகத்தின் மகிழ்ச்சியான தருணம்.

அருமை நிழல்: 1968-ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது வந்து வாழ்த்தியவர்கள் பட்டியலில் பெருந்தலைவர் காமராஜரும் இருந்தார். அறிஞர் அண்ணாவும் இருந்தார். பக்தவச்சலம், கலைஞர் கருணாநிதியும் இருந்தார்கள். கட்சி வேறுபாடுகள் கடந்து பலரை ஒருங்கிணைந்தது சிவாஜி வீட்டுத் திருமணம்.

சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் பெயரில் டெய்லர் கடை!

சிங்கப்பூரில் ஒரு தையற்காரர், ‘எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர்’ என்று கடை நடத்தி வந்திருக்கிறார். மக்கள் திலகம் அவர்கள் திரைப்படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளைத் தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒரு சமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். பார்த்தார். “காணாதது தான் தெய்வம், நீங்கள் என் கண்கண்ட தெய்வம். தெய்வம்னா காணிக்கை செலுத்தணுமாம். நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன்” என்று ஒரு சூட் கொடுத்தார். “அளவு எது? நாயுடு கொடுத்தாரா?” – […]